பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐம்பத்திரண்டாவது அதிகாரம் .ெ த ரிங் து வினை யாடல் அ.தாவது தக்கவரைத் தகுதியாய் ஆராய்ந்து கொண்டு உரிய காரியங்களேத் தந்து அவரை அரசன் ஆளும் திறம். ஆட்சிக்கு உரிமையான துணேவராக அறிஞரைத் தெரிந்து தெளிந்து கொண்டபின்பே இது கன்கு நிகழும் ஆதலால் அதன் பின் வைக்கப்பட்டது. 511 அன்றரிசி லாரை அமைச்சாக ஏனரசன் குன்ருமல் கொண்டான் குமரேசா-நன்ருக நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். (க) இ-ள். குமரேசா : அரிசில்கிழாரை ஏ ன் சேரமன்னன் அமைச்சராக நாடி அமைத்துக் கொண்டான் ? எனின், நன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த தன்மையான் ஆளப்படும் என் க. வினே யாளின் நிலைமையை இது விளக்கியுளது. நன்மை தீமைகளே நன்கு ஆராய்ந்து நல்லது செய்து வந்த தன்மையாளனேயே வினையாளனுக விழைந்து கொண்டு அரசன் ஆள வேண்டும். இராச காரியங்களே H உரிமையோடு செய்ய வுரிய தகுதியாளரின் தகைமைகள் வகையாத் தெரிய வந்தன. நன்மை= தருமநீர்மை. தீமை= பாவப்புன்மை. மாந்தர் செய்து வருகிற செயல்கள் எல்லாம் நல்லது தியது என இரு வகைகளில் அடங்குகின்றன. பிற உயிர்கட்கு இதமாயிருப்பது நன்மை: அகிதமா யிருப்பது தீமை. நன்மை செய்பவன் புண்ணியவாய்ை உயர்ந்து எவ்வழியும் இன்பமும் புகழும் எய்தி வருகிருன். தீமை செய்பவன் பாபியாய் இழிந்து போகிருன். 341