பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2722 திருக்குறட் குமரேச வெண்பா தான் .செய்யும் செயல்களின் கலம் தீங்குகளின் படியே நல்லவன் என்றும், தீயவன் என்றும் மனிதன் சொல்லப்படுகிருன். உருவ நிலையில் ஒத்திருப்பினும் செயல் வகைகளால் உயர்வு தாழ்வுகளே மனிதன் யாண் டும் நியமமாய் அடைந்து வருகின்ருன். நல்லது கெட்டதுகளைப் பகுத்தறிந்து எவ்வழியும் நலம்புரிந்து வருபவன் சிறந்த மேலோன் ஆகின்ருன். அத்தகைய உத்தமனேயே அ ர ச ன் உரிமையாய்த் துணேக்கொள்ள வேண்டும் என்பார் கலம்புரிந்த தன்மை யான் ஆளப்படும் என்ருர் படும் என்றது அடிப்பட்ட அரசவழக்கத்தைத் தெளிவா வெளிப்படுத்தி நின்றது. புரியும் என்னது புரிந்த என்று இறந்த காலத்தால் கூறியது, நல்ல செயல்களில் பண்டே பழகி வளமை யாய்த் தேர்ந்து வந்துள்ள கிழமை தெரிய. நல்லவும் தீயவும் நாடி நாயகற்கு எல்லேயின் மருத்துவன் இயல்பின் எண்ணுவார்; ஒல்லைவந் துறுவன உற்ற பெற்றியின் தொல்பே நல் வினை என உதவும் சூழ்ச்சியார். (இராமா, மந்திரம் 12) தசரத மன்னனுடைய மந்திரிகளே இந்தவாறு காவி யக் கவி காட்டியிருக்கிருர். நன்மையும் தீமையும் காடி என்னும் இக்குறளே உள்ளம்கொண்டே இது உருவாகி வந்துளது. நோய் நீக்கிச் சுகம் ஆக்கும் மருத்துவன் போலவும், எவ்வழியும் இன்பமே கல்கும் கல்வினே போலவும் என்றது, கலம்புரிந்த தன்மையான் என்ப தற்குத் தெளிவான விரிவுரையாய் ஒளிபுரிந்துள்ளது. உண்மையை ஊ ன் றி நோக்கி உற்றுள்ள குறிப்பு களேக் கூர்ந்து ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். எவ்வகையிலும் அரசனுக்கும் நாட்டுக்கும் இதமே காடிச் செய்யும் அறிவாற்றலுடையவரே அமைச்சர் ஆதற்கு உரியவர் என்பது இங்கே தெரிய வந்தது. நல்லவும் தீயவும் நாடிப் பிறருரைக்கும் o நல்ல பிறவும் உணர்வாரைக் கட்டுரையின்