பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2724 திருக்குறட் குமரேச வெண்பா இவ்வுண்மை அரிசில்கிழார்பால் அறிய வங்தது. ச ரி தம். இவர் அரிசில்கரை என்னும் ஊரில் இருந்தவச். வேளாளர் மரபினர். பல நூல்களேயும் நன்கு பயின்று. தெளிந்தவர். தெளிந்த புலமையோடு சிறந்த கவிகளே இயற்றும் ஆற்றலும் இ வ. ரி ட ம் ஒருங்கே கிறைக் திருந்தன. சங்கப் புலவருள் ஒருவராய் இவர் விளங்கி இருந்தார். தமிழ்ச் சங்கத்தில் திருக்குறளே காயர்ை அரங்கேற்றியபொழுது அந்த அருமை நூலே வியங்து பாராட்டி இவர் புகழ்ந்து போற்றினர். அன்று இவர் பாடிய வெண்பா அயலே வருகிறது. பரந்த பொருள் எல்லாம் பாரறிய வேறு தெரிந்து திறந்தொறும் சேரச்-சுருங்கிய சொல்லால் விரித்துப் பொருள் விளங்கச் சொல்லுதல் வல்லாரார் வள்ளுவரல் லால்? (திருவள்ளுவமாலை 13) அரிய கல்வியறிவும் இ னி ய சொல்வன்மையும் உடைய இவர் பேகன் முதலிய குறுநில மன்னர்களுக்கு உறுதி நலன்களேயுணர்த்தி எல்லார்க்கும் யாண்டும் இதம்புரிந்து வந்தார். நன்மை தீமைகளே காடியறிந்து எவ்வழியும் செவ்வியராய் கலம்புரிந்து வருகிற இவரது பெருந்தகைமையை அறிந்து பெருஞ்சேரலிரும் பொறை என்னும் சேரமன்னன் இவர்ை ஆர்வத்துடன் அழைத்து நேரே தனக்கு மதி மந்திரியாகப் பேணிக் கொண்டான். அந்த அரசனுடைய நீதி கொடை வீரங்களே உணர்ந்து உவந்து அவன்மீது பத்துப் பாடல்கள் பாடினர். உயிர் போற் றலேயே செருவத் தானே; கொடைபோற் றலையே இரவலர் நடுவண்; பெரியோர்ப் பேணிச், சிறியோரை அளித்தி; நின் வயிற் பிரிந்த நல்லிசை கன வினும் பிறர் நசை அறியா வயங்குசெந் நாவிற் படியோர்த் தேய்த்த ஆண்மைத் தொடியோர் தோளிடைக் குழைந்த கோதை மார்ப ! அனய வளப்பருங் குரையை அதனுல்; 5