பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2430 திருக்குறட் குமரேச வெண்பா மாலியவான் மறுபடியும் வலிய வந்து மனம் மிக மறுகி உரிமையுடன் மதிநலம் கூறினன். முன்னம் சொன்ன உறுதிமொழிகளே யா து ம். கேளாமல் இறுமாங்து இகழ்ந்து போன்ை ஆதலால் அம். முதியவன் இம் மன்னனுக்கு அம் மூதுரைகளேச் சுட்டிக் காட்டிப் பின்னும் பேரன்போடு பேச நேர்ந்தான். தன் பேர&ன நோக்கி அப் பெரியவன் உரைத்த உரைகள் இருவர் நிலைகளையும் தெளிவா விளக்கி வந்தன. மாலியவான் உரைத்தது. முன்உரைத் தேனேவாளா முனிந்தனே; முனியா உம்பி இன்உரைப் பொருளும் கேளாய்! ஏது உண்டுஎனினும் (ஒராய்! நின்உரைக்கு உரை வேறு உண்டோ? நெருப்புரைத்தாலும் (நீண்ட மின்உரைத் தாலும் ஒவ்வா விளங்கொளி அலங்கல் வேலாய்! விளைந்துள்ள விளைவு. உளேவன எனினும், மெய்ம்மை யுற்றவர் முற்றும் ஒர்ந்தார் விளைவன சொன்ன போதும் கொள்கிலே! விடுதி கண்டாய்! கிளேதரு சுற்றம் வெற்றி கேண்மைநம் கல்வி செல்வம் களைவரு தானே யோடு கழிவது காண்டி என்ருன். (இராமா: 6, 15; 32; 33) மதிநலமுடைய முதியவன் இவ்வாறு மனம்நொந்து மொழிந்துள்ளான். இவ்வுரைகளால் உற்றுள்ள விளேவு களே ஒர்ந்து உணர்ந்து கொள்கிருேம். பாட்டன் இடித்து அறிவுறுத்தியிருக்கிருன்; தம்பி விபீடணன் அன்போடு அறிவுரைகளே .ெ ந றி மு ைற யே கூறியிருக்கிருன். யாதொன்றும் கேளாமல் தீதுவழியிலேயே செருக்கி கின்றமையால் இலங்கை வேந்தன் அ ல் ல ல் க ளே அடைந்து எல்லாம் இழந்து அழிந்திருக்கிருன்.