பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.46 திருக்குறட் குமரேச வெண்பா இந்த மாயவனுடைய செயல்களில் நேரே கண்டு கிலே மையைத் தெளிந்து உலகம் வியந்து கொண்டது. வினையை முடித்துவரும் வித்தகரைத் தேர்ந்தே வினையை விடுக விரைந்து. காரியத்தைக் காலத்தோடு கருதிச்செய்க. 517 வெற்றியுயர் அங்கதனை வேந்தனிடம் செல்லென்று கொற்றவனேன் விட்டான் குமரேசா-உற்ற இதனை இதல்ை இவன்முடிக்கும் என்ருய்ந் ததனே அவன்கண் விடல். (எ} இ-ள். குமரேசா ! இலங்கை வேந்தனிடம் சென்று வரும் படி அங்கத&ன ஏ ன் இராமன் விடுத்தான்? எனின். இதனே இதல்ை இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன்கண் விடல் என்க. - தக்கவ&னத் தேர்ந்து வினையில் விடுக என்கிறது. இந்த வினையை இந்த உபாயத்தால் இந்த மனிதன் முடிக்க வல்லவன் என்று ஆராய்ந்து அந்த வினையை அவனிடம் உரிமையுடன் தந்து விடுக. இதனே என்னும் அண்மைச் சுட்டு நேரே செய்ய நேர்ந்துள்ள வினையைக் குறித்து நின்றது. அரச காரி யங்கள் பல உள. ஆதலால் அவற்றுள் ஒன்று என்பது ஒருமையால் உணர வந்தது. இதல்ை எ ன் ற து காரியத்தைச் செய்யவுரிய சாதனங்களே. கருவி வகை துருவி அறிய வந்தது. இவன் என்றது வினேயைச் செய்யவல்ல கரும வீரனே, கருமம் கருவி கருத்தா ஆகிய மூன்று நிலைகளும் முறையே தெரிய வந்தன. எல்லாம் கூர்ந்து ஒர்ந்து தேர்ந்து விடின் அங்த வினை இனிது முடிந்து வரும். ஆய்ந்து என்னும் வினையெச்சம் விடல் என்னும் உடன்பாட்டு வியங்கோளேக்கொண்டு முடிந்தது. யாவும் சரியாக அமைந்திருந்தாலும் ஆராயாமல் விடலாகாது,