பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2432 திருக்குறட் குமரேச வெண்பா இவன் பருவம் அடைந்த பின் பரமனே நினேந்து அருங் தவம் புரிந்தான். இவனது தவநிலைக்கு இரங்கிச் சிவ பெருமான் நேரே தோன்றி அருள் புரிந்தார். அந்த ஆண்டவனிடம் இவன் வேண்டியுள்ள வர பலன்கள் நீண்ட வியப்புகளுடையனவாய் நிறைந்து வந்தன. மிக்கதோர் அமர ரால் வியப்பின் மானுட மக்களால் அவுனரால் மற்றை யோர்களால் தொக்குறு விலங்கில்ை துஞ்சிடா வகை இக்கணம் தமிய னேற் கீதல் வேண்டுமால். (1) என்னிக ராகிவந் தொருவன் என் ைெடு முன்னுற வெஞ்சமர் முயலு மென் னினும் அன்னவன் படையினும் அழிவு ருவகை பொன்னவிர் வேனியாய் புரிதல் வேண்டுமால்! (2) வரந்தரு கடவுளர் முனிவர் மற்றையோர் இருந்திடும் உலகெலாம் என்ன தானேயில் திரிந்திடும் ஆழியும் கோலும் சென்றிடப் புரிந்திடும் அரசியல் புரிதல் வேண்டுமால். (3) அன்றியும் ஒன்றுள தடியன் சூழ்ச்சியால் பொன்றினும் பிறவியுட் புகாமை வேண்டுமால் என்றலும் நோற்றவர்க் கேதும் ஈபவன் நன்றவை பெறுகென நல்கி ஏகின்ை. (4) (கந்தபுராணம்) பரம்பொருளிடம் இவன் ப்ெற்றுள்ள பெ ரு ம் பொருள்களே இவற்ருல் அறிந்து கொள்கிருேம். இன்ன வாறு பலவகை வளங்களோடு உலகம் ஆளும் தலைமை யையடைந்து மதங்கபுரி என்னும் தலைநகரிலிருந்து இவன் ஆட்சி புரிந்தான். வானவரும் தானவரும் மான வரும் வழிபட மன்னர் மன்னவனுய் மாட்சி மிகுந்து நின்ருன், இவனுடைய மனேவி பெயர் விசித்திர காந்தி. அவளோடு அ ம ர் ங் து அரிய போகங்களே நுகர்ந்து பெரிய மகிமைகளோடு பெருகி வந்தான். இன்னவாறு பலவகை நிலைகளிலும் தலைமையாய் நிலவி வந்த இவ னிடம் நாளடைவில் செருக்கும் களிப்பும் மிகுந்து வங் தன. தேவர் முதல் யாவருக்கும் அல்லல்கள் புரிந்தான்.