பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2748 திருக்குறட் குமரேச வெண்பா அரிய வினையை ஆற்றி வருமாறு உரியவனேயே ஊக்கி விடுவர். அவன் உற்றதை முடித்து வருவன். இவ்வுண்மை அங்கதன்பால் அறிய வந்தது. ச ரி தம் இவன் வானரவேந்தன் ஆன வாலியின் அருமைத் திருமகன். அரிய பல பண்பாடுகள் அமைந்தவன். பெரிய போர்வீரன். அறிவிலும் ஆற்றலிலும் அனும்ா னுக்கு அடுத்த படியாய்ப் போற்றத் தக்க ஏற்றம் உட்ையவன். தந்தை மாண்டபின் இராமபிரானுக்குச் சேஆனத் தலைவனப் இவன் சிறந்து விளங்கினன். இலங் கையை வளைந்து முற்றுகையிட்ட பின் "இனிமேலாவது எதிரி சமாதானத்துக்கு வருவான ': என்று அறிய விரும்பிஇராவணனிடம் ஒரு துரதுவனே அனுப்பவேண் டும் என்று கோதண்ட வீரன் கருதின்ை. அதற்கு உரிய வ&ன ஆராய்ந்தான். இதனை முடித்து வெற்றியுடன் மீள வல்லவன் அங்கதனே என்று துணிந்தான். உறுதி யுண்மைகளை யுணர்த்தி இவனே உள்ளே விடுத்தான். அனுப்பிய அந்த நிலைகளே அயலே காண வருகிருேம். இராமன் கருதியது. மாருதி இன்னும் செல்லின் மற்றிவன் அன்றி வந்து சாருதல் வலியார் இல்லை என்பது சாலும் அன்றே? யாரினி ஏகத் தக்கார் அங்கதன் அமையும்; ஒன்னர் வீரமே விளைப்பர் ஏனும் தீதின்றி மீடல் வல்லான். (1) . அங்கதனை ஏவியது. நன்றென அவனைக் கூவி நம்பி நீ நண்ண லார்பால் சென்றிரண் டுரையின் ஒன்றைச் செப்பினை திரிதி என்ருன்; அன்றவன் அருளப்பெற்ற ஆண்டகை அலங்கற் பொற்றேன் குன்றினும் உயர்ந்த தென்றல் மனநிலை கூறலாமோ? (2) அவ்வீரன் சென்றது. பார்மிசை வணங்கிச் சீயம் விண்மிசைப் படர்வ தேபோல் வீரன்வெஞ் சிலையில் கோத்த அம்பென விசையிற்போனன்; மாருதி அல்ல கிைல் நீஎனும் மாற்றம் பெற்றேன் ஆரினி என்ைேடு ஒப்பார் என்பதோர் இன்பம் உற்ருன். (3)