பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2750 திருக்குறட் குமரேச வெண்பா பின்றை=பின்பு: சாரியை சார்ந்து இங்ங்னம் வங் துளது. பிற்றை என வலிந்தும் வரும். அவனை=வினையாளனாகத் தேர்ந்துகொண்ட அந்த மனிதன. சுட்டிய குறிப்பு அவன் நிலையை விளக்கியது. அதற்கு= அமைந்த அந்தக் காரியத் தலைமைக்கு. காரியங்களைச் செய்ய உரிமையாத் தெரிந்து தெளிந்து கொண்ட கருமத் தலைவனுக்கு அதிகார ஆற். றல்கள் முதலிய பெருமைகளைத் தந்து பேணிவரின், அவை சீர்மையாய்ச் சிறந்து நடந்து வரும். அவ்வரவால் ஆட்சி மாட்சியாய் உயர்ந்து விளங்கும் ஆதலால் அங் தக் கருமக் காட்சியை இங்ங்னம் உணர்த்தியருளினர். வினைகளே இனிது முடிக்க வுரிய வினையாளனுடைய மனம் மகிழ்ந்து வரும்படி பான்மையோடு மன்னன் அவனை மேன்மைப் படுத்தி வரவேண்டும். வினையாளன் உவந்துவர வி னே க ள் உயர்ந்து முடிந்து வரும்; அதனால் செல்வம் சுரங்து வரும்; அரசு செழித்து வரும். கரும வீரர்களைப் பெருமைசெய்து வருவதில் காரிய சித்திகள் மருமமாய் மருவி யுள்ளன. தெளிந்த வினையில் தெளிந்தவனேச் சிறந்த காலத் தொடும் விடுக்க; விளைந்த அறிவாற் றலுமில்யேல் மிக்க வுரிமை நின்பாலே தளைந்த மனத்தான் ஆயிடினும் தன்பால் வினையைச் சார்த்தற்க; அளந்து வினையில் விடுத்தவனை அதற்குத் தகுமாறு உரிமை செய்க. ".. (விநாயக புராணம்). வினையாளரைத் தெரிந்து தெளிதலும், தேர்ந்து கொண்டபின் வினைகளில் அவரை விநயமாய் ஆண்டு வருதலும், அரசியில் துறைகளாய் ஆட்சி முறைகளாய் பாண்டும் நீண்டு வருகின்றன. செயல் வகைகள் செம். மையாய்ச் சிறந்து வரும் அ ள ேவ அரசு நிலைகள்