பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. .ெ த ரி க் து வினை யாடல் 2753 பழைய மந்திரக் கிழார்மடப் பாவைபோல் வாரை விழவு சால்கடி மங்கல விதியில்ை புணர்த்தி அழகி தாமென நடத்தின்ை அனேயரும் வீரக் கழலி குற்கொரு கவயமும் கண்னுமாய் நடப்பார். (2) உடம்பா றிரண்டிற் குயிரொன் றென. ஒன்றி ஐவாய் விடம்பாய் அரவம் விழுங்கும் இரை ஒத்து நெஞ்சம் திடம்பாடு கொள்ள வினவாங்கிச் செழியன் கல்வி இடம்பாடு நல்கும் பயன்போல் மகிழ்வெய்த நின்றர். (3) (திருவிளையாடல் 46) தனது கருமத் தலைவராக இவரை அமைத்துக் கொண்ட பின்பு, வேந்தன் இவர்க்குப் பெருமை செய் துள்ள அருமைகளே இவை வரைந்து காட்டியுள்ளன. பொருள் நயங்களேக் கருதிக் கண்டு கொள்க. வினேக்கு ஒருவன உரிமை ஆக்கிய பின்பு அவனே அதற்கு உரிய பெருமையில் அரசன் உயர்த்தி வைக்க வேண்டும் என் பதை ஈண்டு இவர்பால் உணர்ந்து கொள்கின்ருேம். காரியம் செய்யும் கருமத் தலைவரைச் சீரியராச் செய்க தெளிந்து. வினையாளரை மேன்மைப் படுத்துக. 519 நின்றதிரு நீங்கியதே நீடுகுபன் கேண்மையன்று குன்றியதால் என்னே குமரேசா-என்றும் வினைக்கண் வினையுடையான் கேண்மைவே ருக நினைப்பான நீங்கும் திரு. (க) இ-ள். குமரேசா : செயலாளன் உரிமையை மாருக எண் ணரிய குபன் ஏன் திரு இழந்து இழிந்தான் ? எனின், வினேக்கண் வினையுடையான் கேண்மை வேறு ஆக கினைப்பான திரு நீங்கும் என்க. நம்பின பின்பு ஐயுறுவது வெய்ய துயரமாம். காரியத்தில் கருத்துடைய வினையாளன் நட்புரிமை யைத் தவருக நினைப்பவனே இகந்து திருமகள் நீங்குவள். 345