பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. தெரி ங் து வினை யாடல் 2755 தனையன் என்ன செய்யினும் தந்தை பொறுத்துக் கொள்ளுதல் போல் வி னே ய ன் யாது செய்யினும் வேந்தன் சகித்து அணேத்துக் கொள்ள வேண்டும். இன்ன செயினும் விடற்பால ரல்லாரைப் பொன்னகப் போற்றிக் கொளல் வேண்டும்-பொன்னெடு நல்லில் சிதைத்ததி நாள்தொறும் நாடித்தம் இல்லத்தில் ஆக்குத லால். (நாலடியார் 225) தனக்கு இதம் செய்யும் இனிய கேண்மையாளர் சில சமையங்களில் இன்ன செய்ய நேரினும் அவரைப் பொன்னகப் போற்றிக்கொள்ள வேண்டும் என ஒரு சங்கப் புலவர் இங்ங்ணம் நன்கு உணர்த்தி யுள்ளார். எரி ஒரோவழி இல்லைச் சுடநேரினும் சமையல் முதலியன செய்ய நாளும் அதனை நயந்து பேணி வருகி ருேம். அதனைப் பேணுதுவிடின் வாழ்வு என் ம்ை? அது போல் வினையாளர் சில சமையம் கடுமையாய் நடந்து கொண்டாலும் அவரை வெறுக்க லாகாது: விழைந்து பேணிக் கொள்ளவே வேண்டும்; அதல்ை இருவர்க்கும் நலமாம் என்பது இதனுல் விளங்கி நின்றது. வாழ்வுக்கு இன்றி யமையாத துணேயாய் ஒன்றி யுள்ள கேயரை நேயமாய்த் தழுவி வருபவனே காரிய வாதியாய் யாண்டும் பெருமை மிகப் பெறுகிருன். உழைப்பாளி உள்ளம் உவீந்துவரின் உழைப்பின் பலன் கள் வெள்ளமாய் விரிந்து வரும். நல்ல வினையாளரை நயந்து தழுவிக் கொள்வதே கலமாம்; நயவாது இகழ்ந்தால் செல்வம் கெடும். இவ்வுண்மை குபன்பால் தெரிய வந்தது. ச ரி த ம். இவன் சாளுவ தேசத்து அரசன். பெருந் திருவும் அருந்திறலாண்மைகளும் அறிவு கலன்களும் இவனிடம் நன்கு அமைந்திருந்தன. அரசியல் முறைகளே இனிது அறிந்து இவன் ஆட்சி புரிந்து வந்தான். காட்சிக்கு எளியணுய்க் கடுஞ்சொல் இல்லாதவயிைருந்தாலும்