பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. தெரி ந்து வினை யாடல் 2757 520 வாடாமல் நாடி இக்கு வாகுநிற்ப ஞாலமெலாம் கோடாத தென்னே குமரேசா-விடாமல் நாடோறும் நாடுக மன்னன் வினேசெய்வான் கோடாமை கோடா துலகு. (ம்) 'இ-ள். குமரேசா வினையாளரை நாடிவந்த இக்குவாகுவின் நாடு ஏன் எவ்வழியும் வளமாய்க் கூடி வந்தது? எனின். வினை செய்வான் கோடாமை உலகு கோடாது; மன்னன் நாள்தோறும் நாடுக என்க. வேந்தும் வினையாளும் வியன அறிய வந்தனர். வினையாளன் செம்மையாய்க் காரியம் செய்துவரின் உலகம் நன்மையாய் டிேவ்ரும் ஆதலால் அரசன் நாளும் அவனே நன்கு ஆய்ந்து வருக. மன்னனது நாட்டம் மன்னிய தேட்டமாய்ப் பெருகி வருதலால் அதன் மகிமை இங்ங்னம் தெரிய வந்தது. வினை செய்வான் என்றது அரசகாரியங்களே ஆற்றி வருபவனே. அரசாட்சிக்கு உரிய கருமங்களே உரிமை யுடன் செய்து வருபவர்களுள் தலைமையானவர் அமைச் சர். அவரும் பல துறைகளில் பிரிந்து தனித்தனியே தலைமை தாங்கி நிற்பர். கல்வி கிதி வாணிகம் உழவு முதலாகப் பல வகைகளிலும் பரவி மங்திரிகள் பலர் உள்ளனர். எல்லாருக்கும் தலைவரா யிருப்பவர் முதல் மந்திரி. அவர் அரசனோடு நேரே அதிகமான தொடர் புடையவர். அரசு முறையை ஊக்கி வருபவர் அவரே. அமைச்சர்களே அடுத்துப் பல்வேறு அதிகாரிகள் ஆட்சியில் பங்கு பூண்டுள்ளனர். இவ்வாறு நேர்ந்துள்ள வர்கள் தம் காரியங்களேச் செவ்வையாய்ச் செய்துவரின் வேந்தனுடைய ஆட்சி மாட்சியாய் நடந்துவரும்; காட்டில் எவ்வழியும் வளங்கள் ஓங்கி விளங்கும். காட்டு மக்கள் யாண்டும் இன்பமாய் இனிது வாழ்ந்து வருவர். உரிமையாய் அமைந்த வினையாளரை அரசன் ஒழுங் காக் கவனித்துவரின் தம் தம் கருமங்களே அவர் சசி