பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2760 திருக்குறட் குமரேச வெண்பா அலம்புசை என்னும் அழகிய மங்கையை மணந்து இனிய போகங்களே நுகர்ந்து மாந்தர் யாவரும் மகிழ்ந்து வாழ்ந்துவர இவன் ஆட்சிபுரிந்து வந்தான். பெரிய மெய்ஞ்ஞானிகளும் அரிய தவயோகிகளும் இவனுடைய குணநலன்களை வியந்து உளம் உவந்து வந்தனர். இவன் வழிபட்டு வந்த திருமாலின் திரு உருவமே திருவரங்கத் தில் கோயில் கொண்டுள்ளது. வைகுந்தப் பெருமாளை வையம் தந்த பெருமான் என்று வையமாக்தர் எல்லாரும் இவனை வழிமுறையே வாழ்த்தி வந்துள்ளனர். பிணியரங்க வினையகலப் பெருங்காலம் தவம்பேணி மணியரங்க நெடிமுடியாய்! மலரயனை வழிபட்டுப் பணியரங்கப் பெரும்பாயற் பரஞ்சுடரை யாம்கான அணியரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார். (இராமா, குலமுறை 2) விசுவாமித்திர முனிவர் சனக மன்னனிடம் இவ். வேந்தனைக் குறித்து இவ்வாறு வியந்து புகழ்ந்துள்ளார். அறிவுடையவர் எவரும் இவனே அறிவர்: சிறந்த அறி வுக்குப் பயன் இவனே அறிந்து கொள்வதே இவனே அறியாதவர் அறிவிலிகளே யாவர் என முனிவர் மொழிங் திருத்தலால் இவனது மகிமையை உணர்ந்து கொள் கிருேம். அறியாதார் அறியாதார் என்றதில் அறிவின் சுவை மருவி யுளது. இவனுடைய ஆட்சி முறைகள் மாட்சிமிக வுடையன. சூரியன் எதிரே உலகம் இயங்கி வருதல்போல் இவன் ஆளுகையில் நாடு நடந்து வந்தது. கருமத் துணைவர்களாய் மருவியிருந்த அமைச்சர் முத. லாயினுேரை நாளும் இவன் கருதி வந்தமையால் தேசம் எவ்வழியும் செவ்வையாய்த் தேசு மிகுந்து வந்தது. வினைசெய்வாரை நாள்தோறும் மன்னவன் நாடிவரின் நாடு யா து ம் கோடாமல் யாண்டும் செம்மையாய் நன்மை தோய்ந்துவரும் என்பதை யாவரும் இவன் ஆட்சியில் காட்சியாய்க் கண்டு களித்து வந்தனர். நாடோறும் ஈசன் நடத்தும் தொழில் உன்னர்; நாடோறும் ஈசன் நயந்துாட்டல் நாடிடார்;