பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 சு ற் ற ம் த ழா ல் 2763 பழைமை=கனிந்த உரிமை. முதிர்ந்து கனிந்த கனி பழம் என நின்றது. மரபு முறையே தொடர்ந்து படிந்து எவ்வழியும் கிழமை சுரந்து வருகிற உறவுரிமை பழைமை என வந்தது. பாராட்டுதல்=உவந்து கொண்டாடுதல். கற்றத்தார்=உரிமையான உறவினர். இன்பம் உறினும் துன்பம் வரினும் அன்புடன் வந்து சுற்றி நிற்கும் கிழமையாளர் சுற்றத்தார் என வந்தார். கண் இரண்டனுள் முன்னது பெயராய்க் காலத் தைக் குறித்தது: பின்னது உருபாய் கின்று இடத்தை உணர்த்தியது. - சுற்றத்தாரை ஆதரவுடன் அணேத்து எவ்வழியும் செவ்வையாய் அரசன் ஒழுகி வர வேண்டும் என்று உணர்த்துகின் ருர் ஆதலால் அவருடைய உண்மை யான உறவுரிமைகளையும் கி லே ைம நீர்மைகளையும் முன்னதாக இங்ங்னம் இனிது விளக்கி யருளிர்ை. பிறருடைய அன்புரிமைகளே நன்கு அளந்து அறி தற்கு வறுமை ஒரு நல்ல கருவி. அந்த உரைகல்லில் உரைத்துப் பார்த்தால் உண்மை உறவுகள் தெளிவாய்த் தெரியவரும். உரிய உறவே பிரியாத பிரியம் உடையது. ஒரு குளத்தில் நீர் நிறைந் திருந்தபொழுது தவளே கள் பல வந்து சேரும்; அங்ர்ே வற்றியவுடன் அவை யாவும் அதனை விட்டு அகன்று போம். செல்வம் உள்ள பொழுது இல்லாத உரிமைகளே யெல்லாம் எடுத்துக் கொண்டாடி எல்லாரும் வந்து அவனே அடுத்து நிற்பர்: அது ஒழிய நேரின் யாவரும் ஒருங்கே ஒழிந்துபோவர். கிளைஞர் மாத்திரம் பரிவுடன் பழைய வுரிமையாளராய்க் கிழமை கூர்ந்து கெழுமி வளமை தோய்ந்து நிற்பர். அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவல்லர்-அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி யுறுவார் உறவு. (மூதுரை 17)