பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.64 திருக்குறட் குமரேச வெண்பா நீர் உற்றபொழுது கொக்கு நாரை முதலிய பறவை கள் குளத்தில் வந்து கூடி நிற்கும்; அது அற்றபோது அவை அயலே பறந்துபோம்: குமுதம் நெய்தல் முதலிய மலர்கள் நீர் உற்ற போதும் அற்ற போதும் அலர்ந்தும் புலர்ந்தும் அங்கேயே தங்கியிருக்கும். இந்த மலர்கள் போல்பவரே நல்ல உ ற வி ன ர் என ஒளவையார் இவ்வாறு சுவையாய் உணர்த்தி யிருக்கிரு.ர். பற்று அற்ற கிலேக்கு நீர் அற்ற குளமும், பழமை யற்ற புலேக்குப் பறந்துபோன பறவைகளும், கிழமை யுற்ற கேண்மைக்கு மேன்மையான மலர்களும் இதில் ஒப்பாய் வந்துள்ளன. கொட்டி=ரிேல் நிலவும் கொடி. பழமை பாராட்டும் பண்பு கிழமையான சுற்றத்தா ரிடமே வளமையாய் வலிமை வாய்ந்துள்ளது என்பதை உவமானத்தால் இது தெளிவா விளக்கியுளது. எத்தகைய கிலேயிலும் மாருமல் அன்பு புரிகிற இத்தகைய உறவினரைப் பேணி வருபவர் பெருமை யுறுவர். உறவு உரமாய் வரின் அரசு உயர்வாய் வரும். பற்றும் வெறுக்கை ஒழிந்துழியும் பழைமை எடுத்துப் பாராட்டும் சுற்றம்; அதனேப் பெருங்கொடையால் தூய மொழியால் தழுவலு:றின், அற்றம் அவனுக்கு ஒருகாலும் அணுகாது; ஆக்கம் மிகப்பெருகும்; முற்ற நினே க்கும் பகைவர் தொழில் முற்றது; ஏம கண்டனே ! (விநாயக புராணம்) சுற்றத்தைத் தழுவி ஒழுகும்படி தனது இளவரசி னுக்கு ஒரு வேந்தன் இவ்வாறு உறுதி கூறியுள்ளான். சுற்றத்தாரை ஆதரித்து வரவேண்டிய முறைகளையும் அவரால் உ ள வ கு ம் ஊதியங்களேயும் உறுதி நலன்களேயும் இதல்ை அறிந்து கொள்கிருேம். முன் இன்னர் ஆயினும் மூடும் இடர்வந்தால் பின்னின்ன ராகிப் பிரியார் ஒருகுடியார்; பொன்ச்ை செயினும் புகாஅர் புனலூர ! துன்னினர் அல்லார் பிறர். (பழமொழி 66)