பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. சு ற் ற ம் த ழ ா ல் 2765 ஏதேனும் ஒரு காரணத்தால் பகையாயிருந்தாலும் இடர் நேர்ந்தபோது உறவினர் உரிமையுடன் வந்து உதவுவர் எவ்வளவு இதம் செய்திருந்தாலும் பிறர் இவ்வாறு உதவி புரியார் ஒதுங்கி விடுவர் என இது உரைத்துளது. சுற்றத்தாரின் உள்ளப் பரிவும், மற்றவரின் கள்ளக் கரவும் தெள்ளத் தெளிய இங்கே தெரிய வந்துள்ளன. செல்வம் அற்று வறுமை யுற்றபோதும் உறவினர் உரிமையுற்று உள்ளன்புடன் சூழ்ந்து உதவ வருவர். இவ்வுண்மை சோமகர் பால் தெரிய வந்தது. ச ரி த ம் இவர் பாஞ்சால தேசத்தில் இருந்தவர். அரசர் மரபினர். பெருந்திருவினர். அருங் திறலாண்மைகள் கிறைந்தவர். பஞ்ச பாண்டவர்க்குத் தாய்வழியில் நெருங்கிய உறவினர். தருமர் முதலிய ஐவரும் அச சிழந்து அடவியில் புகுந்ததை அறிந்ததும் இவர் பரிந்து வருந்தினர். விரைந்து அவரை நேரே கான வங்தனர். விராடன் துருபதன் முதலிய அரசர்களும் இவ்வுறவின ரோடு சேர்ந்தனர். காமியம் என்னும் வனத்தில் வங்து அவரைக் கண்டனர். பாஞ்சாலியோடு பரதேசிகளாப் அவர் வனவாசம் செய்ய நேர்ந்துள்ளதை கோக்கி நெஞ் சம் துடித்தனர். துரியோதனன் ஆதியரை வென்று அரசை மீட்டித் தருகிருேம் என்று இவர் வீர வாதம் கூறினர். உரியவர் உரைகள் பரிவு மீதுார்ந்து வந்தன. பாரிழந்த இப் பாதகச் சூதுகேட்டு ஈரும் நெஞ்சினர்; ஏமுறு நோக்கினர்; பேர றன்தரு பிள்ளையைப் பார்த்தருள் கூர அன்பொடு இவையிவை கூறுவார்: (1) மரபின் வல்லியை மன்னவை ஏற்றிய குருகு லேசனைக் கொற்றவெஞ் சேனையோடு இரிய எற்றுதும் இப்பொழு தேயென உரமும் சீற்றமும் தோற்ற உரைசெய்வார் : {2}