பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. சு ற் ற ம் த ழி ா ல் 2767 விருப்பு= ஆசை: பிரியம். அரு= அரு.த. உள்ளே விருப்பம் இல்லாமல் வெளியே சுற்றத் தவர் போல் உற்றிருப்பவரும் உளர் ஆதலால் அவசை விலக்கி ஒழித்தற்கு இவ்வாறு விசேடித்து விளக்கினர். என்றும் மாருத நிறைந்த அன்புடைய உ ற வு கிலே இங்ஙனம் நயமாய் உணர வந்தது. இயையின் என்றது அவ்வாறு செவ்விய உறவினர் இயைதல் அரிது என்பது தெரிய நின்றது. இயைதல்=எய்தல்: அமைதல். இயல்பாக வந்து இசைவதே உயர்வான உறவாய் உரிமை சுரங்து வரும். அரும்புதல் என்னும் தொழிற் பெயர் விகுதிகுன்றி. அருப்பு என வலித்தல் விகாரம் பெற்று கின்றது. அரும்புதல்=முளேத்தல்; கிளேத்தல்; வளர்தல். அருப்பு அரு ஆக்கம்=வளர்ச்சி குன்ருத செல்வம். மேலும் மேலும் கிளர்ச்சியாய் வளர்ச்சி மிகுந்து ஓங்கி வருகிற திரு ஈங்கு இங்ங்னம் உணர வந்தது. விருப்பு என்று முதலில் வந்தமையால் அதற்கு இயைய அருப்பு என எதுகைத் தொடையாய் அமைக் தது. முதல் சீரிலும், நான்காம் சீரிலும் இவ்வாறு அமைந்து வருவது ஒருஉவெதுகை எனப்படும். இந்த எதுகையை மிகவும் பிரியமாய் நூல் எங்கனும் அடிகள் அமைத்துள்ளார். அ ங் த உண்மையை இடங்கள் தோறும் நன்கு கண்டு கொள்ளலாம். இருசீர் இடையிடின் ஒருஉவென மொழிப. (தொல்காப்பியம், செய்யுளியல் 99) இந்த இயல் விதி ஈண்டு எண்ணி யுனா வுரியது. நான்காம் சீரில் வந்துள்ள எதுகையின் இன எழுத் திலேயே அடுத்த அடியைப் பெரும்பாலும் தொடுத் தருளுவார். அருப்பு என வந்திருத்தலால் ஆக்கம் என அமைத்தார். யாப்பு வகையில் விளைந்து வந்திருக்கும் விசித்திர நடைகள் வியந்து காணவுரியன. அறிவின்