பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2774 திருக்குறட் குமரேச வெண்பா கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள் தசளிலான் குடியேபோல் தமியவே தேயுமால். (கலி 149) சுற்றத்தாரைத் தழுவாமல் வழுவாய் நழுவ விடுப வன் செல்வம் தானகவே தேய்ந்து மாய்ந்துபோம் என கல்லந்துவர்ை என்னும் சங்கப் புலவர் இங்ங்னம் கூறியிருக்கிருர். குறிப்பைக் கூர்ந்து உணர்ந்து கொள்க. கோடு உயரக் குளத்தில் நீர் நிறைகிறது; கூடிய உறவு உயர அரசனிடம் நீ டி ய செல்வம் நிறைந்து வருகிறது. ஆட்சியும் மாட்சியாய் நீட்சியுறுகிறது. சுற்றத்தாரை அளவளாவி வாழாதான் வாழ்வு தாழ்வாம். இவ்வுண்மை துரியோதனனிடமும், சிம்மகன் பாலும் தெளிவாய் நேரே தெரிய வந்தது. ச ரி த ம். பெருந் திருவுடைய பேரரசயிைருந்தும் துரியோ தனன் வாழ்வு பரிதாபமாய் கின்றது. உரிய தாயாதி களான தருமன் முதலாயினரை வீணே பகைத்து வெக் துயர் விகளத்தான். அவர் வெறுத்து அகன்ருர் சுற்றத் தாரைப் பேணுத இவனது குற்றத்தை நோக்கி மற்ற வரும் இவனே இகழ்ந்து வந்தார். கிளேஞரைத் தழுவா மல் கேடுகளையே தழுவி வந்த இவன் இறுதியில் தனது சிறிய தந்தையாகிய விதுரனேயும் பழித்தான். இவன் கூறிய பழிமொழிகளைக் கேட்டு அவ்விழுமிய விரனும் தன் அரிய வில்லை ஒடித்து அயலே எறிந்து விட்டு உள். ளம் கொதித்து உருத்து வெறுத்து ஒதுங்கிப் போன்ை. அந்தச் சிலை ஒடிந்து போனபோது இவன் தலே இடிந்து போயது என்று உலகம் இவனே இகழ்ந்து மொழிந்தது. வில்லை இறுத்துப்போன அவ்வீரன், உள்ளம் கறுத்து உரைத்த உரைகள் இவனுடைய பொல்லாங்குகளேயும் புலைநிலைகளையும் தெளிவா விளக்கி நின்றன. விதுரன் விளம்பியது. ஆவது கருதான் ஆகில் அமைச்சர்சொல் கேளான் ஆகில் விவது குறியான் ஆகில் விளைவதும் உணரான் ஆகில்