பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. சு ற் ற ம் த ழா ல் 2775. நாவது காவான் ஆகில் அவனுக்கா நடந்து போரில் சாவது பழுதென் றன்ருே சகத்துளோர் சாற்றுகின்றர்.(142) செல்வம்வந் துற்ற காலேத் தெய்வமும் சிறிது பேனர்; சொல்வன அறிந்து சொல்லார்; சுற்றமும் துணையும் நோக்கார்; வெல்வதே நினைவ தல்லால் வெம்பகை வலிதென்றெண்ணுர்; வல்வினை விளைவும் ஓரார்: மண்ணின் மேல் வாழு மாந்தர். (பாரதம், கிருட்டினன் துாது) துரியோதனனுடைய ம தி கே டா ன செயல்களே விதுரன் இவ்வாறு உள்ளம் நொந்து உரைத்துள்ளான். சுற்றமும் துணையும் கோக்கார் என்றது. உறவினரையும் உறுதித் துனேயா யிருந்தவரையும் தழுவிக் கொள்ளச மல் ந ழு வ வி ட் டு நாசமடைந்துள்ளமையை கன்கு உணர்த்தி கின்றது. அளவளாவு இல்லாதான் வாழ்வு பழுதாய்ப் ப்ாழ்படும் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி நின்ருன். சிம்மகன். இவன் சிம்மசேனன் என்னும் மன்னன் மகன். அழகும் ஆண்மையும் அமையப் பெற்றவன். பருவம் எய்தியபின் அரசுரிமையை அடைந்தான். அறிவு கலம் இருந்தும் பொறி வெறியன யிழிந்தான். சுரதி என்னும் அழகிய மனைவியோடிமர்ந்து இ னி ய போகங்களே நுகர்ந்து இரவு பகல் தெரியாமல் காம வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தான். அவ்வளவோடமையால் அயல் மகளிரையும் விழைந்து கலந்து மயல் வழிகளிலேயே மயங்கிக் களித்து வந்தான். பெரியோர்கள் இவனுக்கு அறிவுரைகள் கூறினர். காமம் கொடியது. திவினே தியது; உயிர் துயருருமல் உயரவேண்டுமால்ை கெறி கியமங்களோடு வாழ வேண்டும்: த ரு ம நீர் மைகனே இருமையும் இன்பம் தரும்; அல்லாதனவெல்லாம் துன் பங்களே யாம் ' என இன்னவாறு நன்னயமாய்ப் போதித்தும் இவன் புத்தி தெளியாமல் காமப் பித்த ஞகவே பெருகி நின்ருன். * யாக்கையும் கிளேயும் ஆதி யாவையும் நின்ற இல்லை; விக்கிய வினையின் துன்பம் விலக்கலாம் அரணும் இல்லை;