பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2436 திருக்குறட் குமரேச வெண்பா காமனும் இரதியும் கலந்த காட்சியி தாமென இயக்கனும் அணங்க ளுைம்வேறு யாமமும் பகலும்ஒர் ஈறின் றென்ன லாய்த் தாமுறு பெருங்களிச் சலதி மூழ்கினர். (இராமாயணம்} தனது மனைவியுடன் காமச் சுவைகளில் திளேத்துக் களித்து உலக நிலையை மறந்து இரவு பகலறியாது மையல் வெறியனுய் இவன் மூழ்கிக் கிடந்துள்ள கிலே மையை இதல்ை அறிந்து கொள்கிருேம். கல்வி செல் வம் முதலிய பல்வகை கலங்களும் இவனிடம் நன்கு நிறைந்திருந்தன. இருந்தும் நல்லவர்கள் தொடர்பை யாதும் கொள்ளாமல் யாண்டும் உள்ளம் செருக்கி எவ ரையும் மதியாமல் தவருன வழிகளில் இவன் ஊக்கித் திரிந்தான். எல்லார்க்கும் அல்லல்கள் புரிந்து வங்த இவன் ஒருநாள் அகத்திய முனிவரது ஆச்சிரமத்தை அடைந்தான். சாந்த சீலராயமர்ந்திருந்த அ வ ர து குறுகிய உருவ கிலேயைக் கண்டு இகழ்ந்து சிரித்தான். அவ்வளவோடு அமையாமல் அந்தப் புனித கிலேயத்தில் இனிது வளர்ந்திருந்த கொடி செடிகளேச் சிதைத்து ஒழித்து முடிவில் அம் முனிவருக்கும் இடர் புரிந்தான். அம்மாதவர் முனிந்து நோக்கினர். இவன் எரிந்து அழிங் தான். இவனுடைய குடும்பமும் குலேந்து தொலேங்தது. எவ்வளவு வளங்கள் ஒருவனுக்கு அமைந்திருந்தாலும் மதலையாம் சார்பு இல்லார்க்கு நல்ல நிலையில்லை என்பதை இவனதுகிலே எல்லாரும் அறியத் தெளிவுறுத்திகின்றது. சந்த சைல மாதவன் தன்னெதிர் சுந்தன் நின்று துயரங்கள் செய்தனன்; அந்த மாமுனி சீறி விழிக்கவே இந்த மூர்க்கன் எரிந்தழிந் தான ரோ. பெரியார் உறவு பெருந்திரு வாகும் பிரியின் பெரிய பிழை. ஊதியம் என்பது மேதையர் உறவே.