பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2788 திருக்குறட் குமரேச வெண்பா அல்வழி ஆமா மியாமுற்று முன்மிகா. (நன்னூல் 171) இந்த இயல் விதியை இங்கே சிந்தித்துக் கொள்க. கரைதலும் கரவாமையும் உண்ணலுக்கு அடையாகப் கின்று காக்கையின் இயல்பான நீர்மையை விளக்கின. அன்னரோர் = காக்கை போலக் கரவாது கரைந்து உண்ணும் நன்மையான தன்மையாளர். பகுத்து உண்டு பல்லுயிர் ஒம்பும் பண்பு எல்லா அறநிலைகளேயும் இன்ப நலங்களேயும் ஒருங்கே கல்கி யருளும் ஆதலால் அந்தச் செ ல் வ. கிலே இங்கே உரிமையாய்த் தெரிய வங்தது. உள்ளதை ஒளியாமல் காக்கை போலத் தமர்க்கு உண்ண உதவி ஒருவன் வாழ்வான் ஆயின் எல்லாச் செல்வங்களேயும் அவன் எளிதே எய்தி எவ்வழியும் இசை மிகப் பெற்று எவரையும் இனிதே ஆள்வான். இனத்தை உடன் அழைத்து உண்ணும் உயர்வை: நோக்கியே காக்கைகளே மக்கள் ஆர்வத்தோடு அழைத்து நல்ல உணவுகளே நயமா யிடுகின்றனர். தாம் நுகர்வனவற்றைத் தமரும்துகருமாறு செய்து வாழும் தரும் நீரரை உரிமையுடன் உவந்து நோக்கித் தரும தேவதை இருமையும் இன்புறச் செப்தருளும். உறவினர் உ வந்துவர வாழ்ந்து வருபவன் அறவினே யாளனுய் உயர்ந்து வருகிருன். நல்லது புரிபவர் கலம் பல பெறுகிரு.ர். அல்லது செய்பவர் அவலம் உறுகிரு.ர். கரவாது கரைந்து உண்ணும் காக்கைகளே மனிதர் உவந்து உணவூட்டிப் பேணுகின்றனர். கரந்தும் கடிக் தும் உண்ணுகிற நாய்களே இகழ்ந்து வெறுத்து ஒட்டு கின்றனர். இந்த கி லே ைம க ளே நேரே சிந்திக்க வேண்டும். இதம் புரிபவர் எங்கும் இனிய ராகின் ருர். பறவையாயிருந்தும் இனத்தைத் தழுவி நிற்கும் ஒர் இயல்பினுல் உயர்ந்த மனிதரும் உணர்ந்து ஒழுக வேண்டிய உறுதி நிலைக்கு ஒர் உவமையாப் கின்றது.