பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2790 திருக்குறட் குமரேச வெண்பா காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டா காரசிவ போகம்எனும்பேரின்பவெள்ளம்பொங்கித்ததும்பிப்பூரணமா ஏக வுருவாய்க்கிடக்குதையோ! இன்புற்றிடநாம் இனிஎடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாரும் செகத்தீரே! (தாயுமானவர்) இரையைக் கண்ட காகம் தன் இனத்தை அழைப் பதுபோல் இறைவனது பேரின்ப போகத்தைக் கண்ட தாயுமானவர் எல்லாரையும் இவ்வாறு அழைத்திருக் கிருர். காகம் உறவு கலந்து உண்ணக் கண்டீர் ! என் றது அவரது பரந்த அருள் நீர்மையைக் காட்டியுள்ளது. தன்கிளேஞரை ஒருவன் ஊட்டி உண்டால் அவன் வளம் பெற்றுச் செழித்து வாழவேண்டும் என்று அவ சனவரும் உள்ளம் உவந்து கருதுவர்: அதல்ை உரிமை யான செல்வம் பெருகிவரும் ஆதலால் அன்ன நீரார்க்கே. ஆக்கம் உள என்ருர். அறத்தின் வழி ஆக்கம் என்பது இங்ங்னம் நோக்க வந்தது. காக்கையின் இயல்பும் உறவை ஒம்பி வரும் உயர்வும் தருமநீர்மைகளாயுள்ளன. கண்ட இரையைக் கரைந்து கிளேக்கூட்டி உண்டு வருதலால் ஊர்க்காக்கை-அண்டர்க்குச் செய்யும் பலிபூசை செய்துவர நேர்ந்ததுகாண் - உய்யும் வழிதெரிக ஒர்ந்து. இதன் குறிப்புகளேக் கூர்ந்து தேர்ந்து கொள்க. காலை துயில்எழுதல் காணும லேகலத் தல் மாலை ஆ மனே புகுதல்-சீலமுடன் உற்ருே ரா டுண்ணல் உறுவதை முன்னுரைத்தல் கற்ருரோகாக்கையிடம் காண். --- காகத்தின் விவேகங்களே இதல்ை உணரலாம். காகத்து இரு கண்ணிற்கு ஒன்றே மணிகலந் தாங்கிருவர் ஆகத்துள் ஒருயிர் கண்டனம் யாமின்றி யாவையுமாம் ஏகத் தொருவன் இரும்பொழில் அம்பல வன்மலேயில் தோகைக்கும் தோன்றற்கும் ஒன்ருய் வருமின்பத் துன்பங்களே. திருக்கோவையார் 71) இவள்வயின் செலினே இவற்கு உடம்பு வறிதே ; இவன்வயின் செலினே இவட்கும் அற்றே;