பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. சு ற் ற ம் த ழா ல் 279 f காக்கை இருகணின் ஒருமனி போலக் குன்றுகெழு நாடற்கும் கொடிச்சிக்கும் ஒன்றுபோல் மன்னிய சென்றுவாழ் உயிரே. (தொல்-களவு-கோள் 114) ஒர் உயிர்க்கு ஈருடல்போலத் தலைவனும் தலைவியும் ஆர்வமாய் மருவி யுள்ளனர். ஒருமையான அவ்வுண் மைக்குக் காகத்தின் கண்ணே இங்ங்னம் உவமை கூறி யுள்ளார். ஒரு கண் ஒளி இரு விழிகளிலும் மருவியுளது. கருங்கொடி இருவிழிக் கண்ணும் ஓர்மணி திரிந்திடு செயலெனத் திரித லின்றியே பொருந்துறும் அகமொடு புறமும் தீர்வற இருந்தில குறும் அருள் இட்ட லிங்கமே. --- (பிரபுலிங்கலிலே 16-16) இருகண்ணுக்குஒருமணி காகம் கொண்டுள்ளதைஇதன் கண்ணும் தெரிந்து கொள்கிருேம். கரும்கொடி= காகம். கரையாய் காக்கைப் பிள்ளாய் ! கருமா முகில்போல் நிறத்தன் உரையார் தொல் புகழ் உத்தமனே வரக் கரையாய் காக்கைப் பிள்ளாய் ! (திருமொழி 10-10) திருமங்கையாழ்வார் திருமாலேக் கண்டு மகிழ விழைந்து காக்கைய்ை இங்ங்னம் வேண்டி யிருக்கிரு.ர். காக்கையின் நீர்மைகளேக் கவிகள் எவ்வாறு கருதி எவ்வகையில் உணர்ந்து வந்துள்ளனர் என்பதை நூல்களில் பலவாறு நாம் அறிந்து வருகிருேம். செஞ்சோற்றுப் பலி மாந்திய கருங் காக்கை. பொருநர் 183) உகுபலி அருந்திய தொகுவிரற் காக்கை புன்கண் அந்திக் கிளைவயின் செறிய. (நற்றிணை 343) பனங்கள் அஞ்சாலும் பருவர வார்த்தவன் தில்லேயன்ன மனங்கொளஞ்சாயலும்மன்னனும் இன்னே வரக்கரைந்தால் உணங்கல்அஞ் சாதுண்ண லாம்.ஒள் நினப்பலி ஒக்குவல்மாக் குணங்கள் அஞ்சாற்பொலியும்நல சேட்டைக்குலக்கொடியே! (திருக்கோவையார் 235):