பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2792 திருக்குறட் குமரேச வெண்பா பாவிரி மாபுகழ் வெங்கை புரேசர் பனிவரை மேல் பூவிரி வான்பொழில் காப்பதற் காகப் பொருதிரைத்தண் காவிரி மாதை வருவித்த காக்கையும் காக்குங்கொலோ? மாவிரி மாகுழல் நன்மாதை யீங்கு வரவழைத்தே. (திருவெங்கைக் கோவை 336) கூர்க்கும் பலிதரு வேன்கொடியே என் கொடி திரும்ப ஏற்கும் படிகாைந்து என்னுயிர் தாவிருங் கூற்றிலங்கை ஊர்க்குமுன் ஏவும் குலோத்துங்க சோழன் உறந்தைவெற்பில் ஆர்க்குமங் காக்கையன் ருேவுயிர் தாங்கும் அகிலத்திலே. (குலோத்துங்கசோழன் கோவை 382) மின்னுர் சடையண்ணல் கோடிச் சுர மன்ன மெல்லியலை உன்னு எளியேன் கரை யாமல் நீகரை வுற்றுதவின் பொன்னர் கலந்தனில் பாயச ஆனுமென் போனகமும் மன்கு தரவொ டுனக்களிப் பேன்கொம்பில் வாழ்கொடியே ! |கோடீச்சுரக்கோவை 344). கரவாமல் கரைந்துண்ணும் நீர்மையால் காக்கை எவ்வளவு சீர்மை அடைந்துள்ளது என்பதை இவற்ருல் ஒர்ந்து கொள்கிருேம். மாக்குணங்கள் அஞ்சால் பொலி குலக்கொடியே! = சிறந்த குணங்கள் ஐந்தால் உயர்ந் துன்ள மேலான காகமே ! என்று மாணிக்கவாசகர் இவ் வாறு காகத்தைப் புகழ்ந்திருக்கிருர், இக் கவிகளில் கனிந்து வந்துள்ள கலையின் சுவைகளேயும் பொருள்களே யும் நயங்களேயும் கருதி யுணர்ந்து கொள்ள வேண்டும். உரிய சுற்றத்தாரை மனிதன் பிரியமாய் அணேத்து ஆதரித்து வரவேண்டிய கடமையைக் காக்கையிடமிருந் தாவது கற்றுக்கொள்ள வேண்டும் என அடிகள் ஈண்டு அறிவுறுத்தி யுள்ளார். கருத்துக்களேக் கருதி உணர்க. கிளேஞரை ஒம்பிவரின் செல்வம், கிளர்ந்து வரும். இவ்வுண்மை பூதன் ஆதியர் பால் தெரிய வந்தது. ச ரி த ம். 龍』 பூதன் என்பவன் புள்வேளுர் என்னும் ஊரில் இருக் தவன். உழு தொழிலாளன். தனக்கு உரிய சிறிய நில. வருவாயைக் கொண்டே பலர்க்கும் உபகாரியாய் இவன்