பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. பெரியாரைத் துனைக் கோடல் 2437 450. கற்றறிந்த நற்குருவைக் கைவிட்டான் இந்திரன்பின் குற்றமுற்ருன் என்னே குமரேசா-சுற்றிநின்று பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல். (ά)) இ-ள் குமரேசா! தனது குருவின் உறவை இழந்த இந்தி ரன் பின்பு ஏன் பெரிய துயரம் அடைந்தான்? எனின், நல்லார் தொடர் கைவிடல் பல்லார் பகைகொளலின் பத்து அடுத்த திமைத்தே என்க. பெரியார் உறவு ஒழியின் பேரிழவாம் என்கிறது. நல்லவருடைய கட்பை கழுவவிடின் அது பலருடைய ப ைக ைய க் கொள்வதினும் பத்து மடங்கு தீமை யுடையதே. யாண்டும் நன்மையான தன்மையுடையார் ஈண்டு கல்லார் என வந்தார். நல்ல எண்ணங்களும், நல்ல மொழிகளும், நல்ல செயல்களும் உடையராப் எவ்வழி யும் நலமாய் ஒழுகி வரும் விழுமியோரே பெரியோர் என்பது தெரிய கல்லார் என்ருர். நல்லாரைத் துணேக்கொண்டால் ல ன் க ள் பல உளவாம் ஆதலால் எல்லா வகையிலும் அவரை உரிமை யோடு பேணி வருடவர் பெரிய பயன்களைப் பெற்று அரிய நயன்களுடன் உயர்ந்து வருகின்ருர். நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலமிக்க நல்லார்சொற் கேட்பதுவும் நன்றேயாம்-நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு இனங்கி யிருப்பதுவும் நன்று. (மூதுரை 8) நல்லாருடைய தொடர்பால் விளேயும் நல்ல மாண் புகளே ஒளவையார் இவ்வாறு குறித்துள்ளார். = நல்லார்சொல் விரும்புவதும், நல்லாரைக் காண்பதுவும், நல்லார்க்கு ஒன்று உதவுவதும், நல்லாரைப் புகழ்வதுவும், நல்லார்நன் றென்றுரைப்ப நவிற்றிய இவ் வெலாம் அடங்க நல்லார்நட் பென்றுமுஜல் நன்றன்றே நான்மறையோய்! (குசேலம்)