பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. சு. ம் ற ம் த ழா ல் 2797 விழைந்து சூழ்ந்து நிற்பர் ஆதலால் வரிசையா நோக்கின் அது கோக்கி வாழ்வார் பலர் என்ருர். அ. து என்றது வரிசை அறிந்து செய்த அக்த மரியாதையை. அறிவு நோக்கு பெரிய பாக்கியம். பொதுநோக்கு மடமை மருவியது. வரிசைநோக்கு மதிநலம் உடையது. வரிசை அறிதலும் வரையாது கொடுத்தலும். (சிறுபாண் 217) வரிசையின் நல்கி. (புறம் 6) வரிசைப் பெரும் பாட்டு. (கலித்தொகை) வரிசைக்கு வருந்தும். (புறம் 206) வரிசையின் அளவளாய். (இராமா 1-18) - இவற்றுள் வரிசை உணர்த்தி நிற்கும் பொருளே அறிக. ஊனுண் டுழுவை நிறம்பெறுTஉம்; நீர்நிலத்துப் புல்லினுல் இன்புறு உம் காலேயம்;-நெல்லின் அரிசியான் இன்புறு உம் கீழெல்லாம்; தத்தம் வரிசையான் இன்புறுTஉம் மேல். (நான்மணி 68) புலி ஊன் உண்டு களிக்கும்; பசு புல் உண்டு உவக்கும்; கீழ்மக்கள் சோறு உண்டு மகிழ்வர்: மேன் மக்கள் வரிசையான் இன்புறுவர் என விளம்பிகாகளுள் இங்ங்னம் விளம்பியுள்ளார். வரிசைக்கும் மேலோர்க் கும் உள்ள உறவுரிமைகளேயும் உள நிலைகளேயும் இ த ன ல் உணர்ந்து கொள்கிருேம். புலவர் பெருமானை கபிலர் ஒரு முறை மலையமான் திருமுடிக்காரி என்னும் குறுநில மன்னனேக் கண்டார். அவன் சிறந்த கொடையாளியே. ஆயினும் புலவர்களு டைய தலைமை நிலைமைகளேச் சரியாய்த் தெரிந்து கொள்ளவில்லை: பொருள் பெற வருபவர் தானே என்ற சிறுமையான நோக்கம் அவனிடம் சிறிது மருவியிருக் தது. அதைக் குறிப்பால் உணர்ந்த இப்பெருங்தகை அவனுக்கு உறுதி நலன்களேத் தெளிவாக அறிவுறுத்தி ஞர். அந்த அறிவுரைகள் உ ண ர் வி ன் ஒளிகளாப் வெளியே விரைந்து வந்தன. அயலே வருவன கானுக.