பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24.38 திருக்குறட் குமரேச வெண்பா கண்ணன் குசேலரை நோக்கி நல்லார் நட்பை நயந்து வர இவ்வாறு வியந்து கூறியிருக்கிரு.ர். நல்லார் இணக்கமும் நின் பூசை நேசமும் ஞானமுமே அல்லாது வேறு நிலேயுளதோ? அகமும் பொருளும் இல்லாளும் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும் எல்லாம் வெளிமயக்கே இறைவாகச்சி ஏகம்பனே! (பட்டினத்தார்) நல்லார் உறவைப் புகழ்ந்து பா ரா ட் டி ப் பட்டினத்தடிகள் இங்ங்னம் உணர்த்தி யுள்ளார். நல்லார் செயுங்கேண்மை நாடோறும் நன்ருகும்; அல்லார் செயுங்கேண்மை யாகாதே;-நல்லாய் கேள்! காய்முற்றின் தின் தீங் கனியாம்; இளந்தளிர்நாள் போய்முற்றின் என்னுகிப் போம்? (நன்னெறி 38) கல்லாருடைய தொடர்பின் நயங்களே இன்னவாறு நூலோர் பலரும் வியந்து புகழ்ந்துள்ளனர். நல்லதை விரும்பி வருபவர் நல்லவராய் உயர்ந்து வருகின்ருர். அறன் அறிந்தார், மூத்தார். அறிவுடையார், நோய் நீக்கிக் காப்பார், அரியன புரிவார், ஆய்ந்து சூழ்வார், தக்கார், இடிக்கும் துணேயார், மதலேயாம் சார்பார், நல்லார் என இந்த அதிகாரத்தில் பெரியாரைக் குறித் திருக்கிரு.ர். பெயர்க் குறிப்புகளால் அவருடைய இயல்புகளையும் செயல் முறைகளேயும் உயர்நிலை களேயும் கூர்ந்து ஒர்ந்து தேர்ந்து கொள்ள வேண்டும். பெரியாரது கேண்மையின் அதிசய மேன்மைகளைத் தெளிவாக விளக்கப் பகைவரை இனத்து உணர்த்தி ர்ை. நல்ல ஒருவரது நட்பைக் கைவிடின் எல்லேயில்லாத அல்லல்களே அடைந்து அந்த அரசன் வருந்துவான் என்பார் பல்லார் பகைகொளலின் பத்து அடுத்த தீமைத் தே என்ருர் ஏகாரம் தேற்றம் குறித்து நிற்பினும் பரி தாபநிலை அதன் தொனியுள் மருவியுள்ளது. பத்து என்றது மிகுதியான அளவுக்கு ஒது தகுதியான எண் ணமாய் ஒத்து கின்றது.