பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2442 திருக்குறட் குமரேச வெண்பா உறுவாப் பேணல், உவர்ப்பின் மை, உலேயா இன்பம் தலே நிற்றல், அறிவர் சிறப்பிற்கு எதிர்விரும்பல், அழிந்தோர் நிறுத்தல், அறம்பகர்தல், சிறியார் இனத்தில் சேர்வின்மை, சினம்கை விடுதல், செருக்கவித்தல், இறைவன் அறத்து ளார்க்கெல்லாம் இனியர் ஆதல், இது தெளிவே. (சீவக சிந்தாமணி 2816) பெரியாரைப் பேணித் துணைக் கொள்க; சிறியார் இனத்தைச் சேராதே என இது குறித்துள்ளது. பத்து நீர்மைகள் சீர்மைகளாய் இதில் வந்துள்ளன. உண்மைகளே உய்த்து உணர்ந்து கொள்க. நல்லார் உறவினே நாடி நயந்துகொளின் எல்லா நலமும் எளிதெய்தும்-நல்லார்தம் உள்ளம் திரியினே ஒல்லாத் துயரங்கள் வெள்ளமென நேரும் விரைந்து. கல்லார் உறவு கழுவின் அதுகொடிய பொல்லாத் துயரம் புலை. பெரியாரைப் பிரியாதே. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. அறிவுடையாரை ஆய்ந்து கொள்ளுக. பாதுகாப் பாளரைப் பார்த்துப் பேணுக. பெரியாரைப் பேணல் பெறலரும் பேரும். அவரைத் தமராத் தழுவித் தகவாய் ஒழுகுக. கண்ணுக் கருதிக் கொண்டு கருமம் புரிக. தக்காரைச் சாரின் மிக்க வெற்றி சேரும். இடித்து அறிவுறுத்துவாரை என்றும் போற்றுக. இடிப்பார் இலரேல் கெடுப்பார் பலர் நேர்வர். ஆதர வாளரை அணேத்து வாழுக. நல்லார் தொடர்பை நாளும் நயந்து கொள். I o 45-வது பெரியாரைத் துணைக்கோடல் முற்றிற்று.