பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2448 திருக்குறட் குமரேச வெண்பா செம்மண் வாய்ந்த புலத்தில் பாய்ந்த நீர் தானகவே. உருமாறிக் கலந்தது போலக் காதலர் இருவர் தாமா கவே கலந்து கொண்டதை இது காட்டியுள்ளது. அப்பென்றும் வெண்மையதாயினும் ஆங்கந் நிலத்தியல்பால் தப்பின்றி யேகுன வேற்றுமை தான்பல சார்தலினுல் செப்பில் அபக்குவம் பக்குவ மாயுள்ள சீவனிலும் இப்படி யே நிற்பன் எந்தை பிரான்கச்சி ஏகம்பனே! (பட்டினத்தார்) கிலத்தியல்பால் நீர் திரிந்து வருதல்போல் சீவர்களின் நிலைமை யளவே ஈ ச னு ம் நேர்ந்தருளுகிருன் எனப் பட்டினத்தார் இவ்வாறு குறித்துள்ளார். அப்பு=நீர். இந்தக் குறளின் கருத்து அந்தப் பெரியவர் உள்ளத்தே புகுந்து இப்படிப் பெரிய பரம்பொருளே விளக்கியுளது. நீரின் இயல்பான நிறம் வெண்மையே என்னும் உண் மையை இங்கே நன்கு தெரிந்து கொள்கிருேம். நிலத்தியல் நீரியல் என்னும் நீரதால். (இராமா: கும்ப 82) நிலத்தியல் பற்றே கொண்மூ நீரியல்பு. (அரிச்சந்திரம்: மீட்சி 76) நிலத்தினுல் நீரின்தன்மை குன்றிய திறம் போல். (மெய்ஞ்ஞான: 2-20) நிலத்தின் இயல்பால் நீர் திரிந்து நிறமும் குணமும் மாறி வரும் என்பதை இவை வரைந்து காட்டியுள்ளன. குறிப்புகள் யாவும் கூர்ந்து ஒர்ந்து உணர வுரியன. சிப்பி முளரிசுரம் ஆறு திரை வீழ்நீர் ஒட்பத் தரளமஃ தொப்பழிவுண் னிருவராம்; அப்படியே மாந்தர் அறிவும் இனத்தியல்பால் பற்பல மாறு படும். (இன்னிசை) தான் சார்ந்த சார்புகளின்படியே நீர் கிலே திரிந்து வெளியே தோன்றும்; அதுபோல் மாந்தர் அறிவும் இனத்தியல்பால் மாறுபடும் என இது கூறியுளது.