பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. சிற்றி ன ஞ் சேரா ைம 2453 மனிதர்க்கு உணர்வு பொதுவாகத் தம் மனத்தால் உளதாம் சிறப்பாகச் சுட்டிக் கூறப்பெறும் சொல் சேர்ந்த இனத்தால் உளதாம். அறிவு இனத்தியல்பதாகும் என்று முன்பு குறித் தார்; மனிதனும் இனத்தின்படியேயாவான் என இதில் உணர்த்துகின்ருர். விலங்கு பறவை முதலிய வேறு பிராணிகள் எவற். றனும் மனிதன் உயர்ந்துள்ளான்; அந்த உயர்ச்சி மன வுணர்ச்சியால் அமைந்துள்ளது. இயல்பான அ ள் வுணர்ச்சி மற்ற உயிர்களினும் மனிதன் மேலானவன் என உயர்த்தி யிருப்பினும் மனித மரபுள்ளே அவன் உயர்ந்தவனு? அல்லது தாழ்ந்தவன? என்பதைச் சேர்ந்த இனமே தெளிவாக நன்கு விளக்கி விடுகிறது. நல்லவரைச் சேர்ந்தவன் நல்லவனுகின்ருன் திய வரைச் சேர்ந்தவன் தீயவனுகின்றன். .ே ம .ே லா ன். கீழோன், பெரியவன். சிறியவன், சாது, மூர்க்கன், விரன், பேடி என இன்னவாறு பேர்பெற்று வருவது பெரும் பாலும் சேர்ந்த இனத்தாலேயே நேர்ந்து வருகிறது. ஆகவே இன்ஞன் எனப்படும் சொல் இனத்தான் ஆம் என்ருர் இனத்தின் வலிமை இனிது தெரிய வந்தது. மனம் இயற்கையாய் இயைந்தது: இனம் செயற் கையாய் அமைந்தது. அது உள்ளே உயிரை ஒட்டி நுட்பமாயுளது. இது வெளியே உடலே ஒட்டித் திட்ப மாய் நிற்கிறது. அதனினும் இதுவே மனிதனே இன்ன்ை என்று உலகம் அறிய நேரே உருவாக்கி விடுகிறது. ஒருவன் மனம் நல்லதா யிருப்பினும் கெட்டவர் களோடு சேர்ந்திருந்தால் கெட்டவன் என்றே அவன் சொல்லப்படுகிருன். கேடும் அடைகிருன். மனத்தால் மறுவில ரேனும்தாம் சேர்ந்த இனத்தால் இகழப் படுவர்-புனத்து வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே எறிபுனம் தீப்பட்டக் கால். (நாலடியார் 180)