பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245.4 திருக்குறட் குமரேச வெண்பா மனம் மாசின்றி யிருப்பினும் சேர்ந்த இனம் நீசமா யின் அதல்ை நாசமே யாம் என இது குறித்துளது. இந்தக் குறளின் பொருளேத் தெளிவாக விளக்க ஒர் உ வ மை தோய்ந்து வந்துள்ளது. அவ்வுண்மையை இதில் நுண்மையாய் ஒர்ந்து உணர்ந்து கொள்கிருேம். சந்தன மரம் நல்லது; நறுமணமுடையது: யாரும் பிரியமாய் உவந்து கொள்வது. அத்தகைய தரு அருகே சேர்ந்த செத்தைகளில் தீப்பற்றியபோது எ ரி ந் து கரிந்துபோம். எத்தகைய உத்தமராயினும் சிற்றினத் தைச் சேர்ந்து நின்ருல் சீரிழந்து பேரிழிந்து அழிந்தே போவர் என்பதை இங்கே தெளிந்து கொள்கிருேம். சிற்றினம் சேராமையோடு அ த ன் அருகேயும் நிற்க லாகாது; அயலே விரைந்து விலகி நீங்கிவிட வேண்டும். கொம்புளதற் கைந்து குதிரைக்குப் பத்துமுழம் வெம்புகரிக் காயிரந்தான் வேண்டுமே-வம்புசெறி தீங்கினர்தம் கண்ணில் தெரியாத துரத்து நீங்குவதே நல்ல நெறி. (நீதிசாரம் 20) விலங்கினங்களேக் காட்டிலும் சிற்றினம் தீயது, அழிதுயர் புரிவது; அதனே அஞ்சி அயலே நீங்க வேண்டும் என இ.து உணர்த்தியுளது. நிந்தையிலாத் தூயவரும் நிந்தையரைச் சேரிலவர் நிந்தையது தம்மிடத்தே நிற்குமே-நிந்தைமிகு தாலநிழற் கீழிருந்தான் தன்பால் அருந்திடினும் பாலதெனச் சொல்லுவதோ பார். (நீதிசாரம் 79) துரய மேலோரும் தீய கீழோரைச் சேரின் அவரை யும் தீயவர் என்றே உலகம் இகழ்ந்து சொல்லும்; பனே யடியிலிருந்து பாலேப் பருகிலுைம் கள்ளைக் குடித்தான் என்றே யாவரும் எள்ளுவர்; ஆகையால் சிற்றினத்தைச் சேர்ந்து கில்லாதே என்று இது தெளிவுறுத்தியுள்ளது. நல்லொழுக்கம் இல்லார் இடஞ்சேர்ந்த நல்லோர்க்கும் நல்லொழுக்கம் இல்லாச்சொல் நண்ணுமே-கொல்லுவிடப் பாம்பெனவுன் னுரோ பழுதையே யானுலும் துரம்பமரும் புற்றடுத்தால் சொல். (நீதிசாரம் 86)