பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2466 திருக்குறட் குமரேச வெண்பா கூறி யுள்ளார். மனம் தூயார்க்கு எச்சம் கன்ருகும என் னும் இதனே அதனோடு இணேத்து எண்ணி ஒற்றுமை நிலேயை உய்த்து உணர்ந்து கொள்ள வேண்டும். மனிதனுடைய வாழ்க்கையில் மக்கட்பேறு மிகவும் சிறந்த பாக்கியமாம்: அரிய நோன்புகள் புரிந்து பெரிய தவங்களால் பெற வுரிய பேருய் அது மருவியுளது. உச்சமான செல்வங்கள் எவ்வளவு நிறைந்திருந்தாலும் நல்ல எச்சம் இல்லையானுல் அவை யாவும் து ச் ச ம ன யிழிந்து நிற்கின்றன. இம்மை யின்பொடு மறுமையின் இன்பமென் றிரண்டுக் அம்மென் மைந்தரை யில்லவர்க்கு இல்லை; மற்றதனுல் எம்மை யாளுடை முருகவேள் அடிமல சிறைஞ்சிச் செம்மை நன்மகற் பெறுகுவம் எனச்சிந்தை செய்தான். (சீகாளத்திப் புராணம்) மகவே மேலாம் கதியாக்கும்; மகவான் உலகம் தனேவெல்லும்; மகவின் மகவால் முடிவின்மை எய்தும் மகவின் மகவழித்த மகவான் மேலேப் பதமுறுந்தென் புலத்தார் கடனே மாற்றுவது மகவான் அன்றி யில்லேயென வகுத்தான் தெரித்துக் கண்ணுவனே. (காஞ்சிப் புராணம்) பகவின் மாட்சிகளே இ ைவ தகவ புணர்த்தி யுள்ளன. குறித்துள்ள பொருள் தயங்களேக் கூர்ந்து ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். உள்ளத் துய்மை யுடையார்க்கு நல்ல பிள்ளைக. உளவாம் என்ற தல்ை இந்த இரண்டு உடைமைகளின் பெருமைகளே உணர்ந்து கொள்கிருேம். மனிதன் மகி மையுறுவது மனத்தால், மனம் மாண்புறுவது தூய்மை யால், துர ய ம ன ம் தோய்ந்தபோதே அந்த உயிர் பேரின்ப நிலையமாய்ப் பெருகி மிளிர்கிறது. தன் மனம் தூய்மையாயிருப்பதோடு தான்சேர்ந்த இனமும் தூய்மையாயிருந்தால் அந்த மனிதன் எல்லா