பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2468 திருக்குறட் குமரேச வெண்பா இவர் சிறந்து விளங்கினர். இவருடைய பெரு மகிமை களே வியந்து திருமாலே இவர்க்கு ஒரு மகனப் உதய மாயினர். அந்த மணிவண்ணன் கண்ணன் என்று பின்பு உலகம் அறியப் பேர்பெற்று கின்ருலும் வாசுதேவன் என்பதே அவற்கு முதலில் உரிமையான நாமமாப் ஒளி பெற்று வந்தது. வசுதேவன் மகன் ஆதலால் வாக தேவன் என நேர்ந்தான். அகிலமும் காத்தருளும் பக வாகனத் தனக்கு மகவாகப் பெற்றுள்ள இவரது அதிசய மாட்சியை வியந்து அமரரும் துதிசெய்து கின்றனர். அல்லியங் கமலம் பூத்த அஞ்சனப் புயலில் தோன்றும் மல்லலேத் தெழுந்த திண்டோள் மாயனேக் கண்ணில் கண்டும் புல்லியும் மோந்தும் அன்பு பூத்துளம் களிப்பப் பெற்ருய்! சொல்லரும் நெறிநீ சேர்தல் செல்வதென் சுடர்செய் வேலோய்! (பாகவதம்) நாரத முனிவர் இவரை இவ்வாறு உவந்து புகழ்க் துள்ளார். இவ்வுலகத்தில் எல்லா நன்மைகளேயும் எய்தி மறுமையிலும் இவர் பேரின்ப நலனைப் பெற்றுள்ள மையை இதில் உய்த்து உணர்ந்து கொள்ளுகிருேம். அரச திருவும் அரிய மகவும் பெறலரும் பேறுகளும் இவர் பெற்று மகிழ்ந்துள்ளார். மனம் தூய்மையும் இனம் துய்மையும் மருவி நின்றமையால் இத்தகைய மகிமைகள் பல இ வ. ரி ட ம் பெருகி வந்தன. மனம் து யார்க்கு எச்சம் கன்ருகும்; இனம் துரயார்க்கு எல்லா நலன்களும் எளிதே உளவாம் என்பதை உலகம் அறிய இவர் நேரே உணர்த்தி நின்ருர். நவையறு செங்கோல் திசைதிசைபோக்கி நானிலம் முழுவதும் விளர்ப்பத் தவலரும் சீர்த்தி வெண்சுதை தீற்றும் தாமவேல் சூரன்நன் மைந்தன் உவவுவெண் திங்கட் கவிகைபா ரேழும் நிழற்றிட ஆழியொன் றுருட்டிக் கவனவாம் பரித்தேர் பார்த்தனுக் கூரும் கண்ணனைத் தரும் வசுதேவன். (கூர்மபுராணம்}