பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. சிற்றி ன ஞ் சேரா ைம 247 of தீதாய்த் திரிந்தபொழுது அவன் தீயவனுய்த் தாழ்க்து யாண்டும் எவ்வழியும் இழிந்து படுகின்ருன். மனத்தின் அளவே மனிதன். மக்கள் மானிடர் என்று மனத்தினுல் மிக்க மேன்மை விளங்கினர்; இல்லெனின் பொக்க மேவும் பொறிகளோர் ஐந்தினுல் ஒக்கு மாவினே ஒத்துயர் வுற்றிடார். (1) நல்ல செய்து நாரை உயர்த்தவும், அல்ல செய்தங் களற்றிடை ஆழ்ப்பவும், வல்ல திந்த மனமலது ஐயனே! இல்லே என்ன இயம்பும் மறையெலாம். (2) மன்னு காம வெகுளி மயக்கம் என்று இன்ன கூடி எறிவளி முன்சுடர் என்ன வாடும் இயல்மனம் தீமனம்; தன்னே யாரும் தடுக்கத் தகாதரோ. (3) மறிந்தி டாது மனபவ னங்கள்தாம் செறிந்த வாயின் சிவமயம் ஆகுமால் அறிந்து வாயுவை அங்ங்ணம் எய்தினுேன் இறந்தி டாத இலிங்கப் பிராணியாம். (4) (பிரபுலிங்க லிலே 18) மனம் கலமாய் அமையின் அவர் மனிதராய் உயர்ந்து வருகிருர்; அவ்வாறு அமையவில்லேயாயின் மாக்களாப் இழிந்து போகின்ருர், மனிதரை உயர்த்தவும் தாழ்த்த வும் வல்லது மனமே. மனம் தீயது ஆல்ை யாண்டும் கோப்களே நீண்டு விளேயும். மனம் புனிதமானுல் அந்த மனிதன் புண்ணியவானுய் எண்ணரிய மகிமைகளே எய்தி என்றும் மகிழ்கிருன் என இவை குறித்துள்ளன. குறிப்புகள் யாவும் கூர்ந்து ஒர்ந்து சிந்திக்க வுரியன. தன் மனம் துர்ப்மை தோய்ந்து நன்மையாக ஒருவ னுக்கு அமையுமாயின் அவன் அதிசய பாக்கியவானுய் எல்லா இன்ப நலன்களேயும் எளிதே எய்துகின்றன். மந்திரி எனலாம் உண்மை மருவுறும் விசாரத் தாலே இந்திரி யங்கள் என்னும் இடர்ப்பகை அறுத்த லாலே