பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. சி. ற் றின ஞ் சேரா ைம 2479 ஏமமுரசம் இழுமென முழங்க (புறம், 3) ஏமம் ஆக. (பெரும்பாண் 66) ஏமம் ஈத்த இம்மா. (கலி 139) ஏம நெறி. (நாலடி 13) ஏம நன்னெறி. (நீலகேசி 557) ஏமச் செங்கோல். (பெருங்கதை 2, 6) ஏமமாக வந்தனள். (ஐங்குறுநூறு 393) ஏமம் எய்துக. (பரிபாடல் 11) ஏமம் இல் மூதுார். (இன்னுநாற்பது 25) ஏமம் சார. (இராமா, அங்கதன் 41) ஏமம் பெற வையம். (இயற்பா, 27) இவற்றுள் ஏமம் உணர்த்தி கிற்கும் பொருள்களே ஒர்ந்து இனங்களேத் தேர்ந்து கொள்க. ஏமாப்பு இறுமாப்பு செம்மாப்பு என்பன உற்ற பற்றுக்கோட்டின் உறுதி கிலேகளேக் கருதி எழுந்த பெருமித வுரைகள். எழுமையும் ஏமாப்புடைத்து. (குறள் 398) முன்னரும் இன்னவாறு வந்துள்ளது. சேர்ந்த இனத்தின் வண்ணமாய் மனிதன் திரிய கேர்வன் ஆதலால் தான் சேரும் இனம் நல்லதாக காடிக் கொள்வதே யாண்டும் நலமாம். மனகலம் இருமையும் இன்பம் தரவுரியது; ஆயினும் அது நல்ல இனத்தோடே கூடியிருக்கவேண்டும். பொல் லாத இனத்தைச் சேர்ந்தால் பு லே யாய் அது மாற நேரும். அவ்வாறு மாருதபடி பாதுகாத்து வருதலால் இனகலம் ஏமாப்பு உடையது என ஏத்த வந்தது. நெருப்பழற் சேர்ந்தக்கால் நெய்போல் வது உம் எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும்-பரப்பக் கொடுவினேயர் ஆகுவர் கோடாரும் கோடிக் கடுவினேயர் ஆகியார்ச் சார்ந்து. (நாலடியார் 124)