பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2480 திருக்குறட் குமரேச வெண்பா நெருப்பைச் சேர்ந்த நீர் வெப்பமாய்ச் சுடும்; அது போல் தீயவரைச் சேர்ந்த நல்லவரும் தீயராய் மாறித் திங்கு புரிவர் என இது குறித்துள்ளது. கயவரைச் சேர்ந்தவன் கலந்த போதவர் செயலினே எள்ளுவன்; தினம் செலச்செல மயல்மிகுந் தவர்செயல் மகிழ்ந்து அனுட்டிப்பன் இயவரைச் சேர்தல்போல் இல்லே தீமையே. (நீதிநூல்) மனநலமுடைய கயவரும் கயவரைச் சேர்ந்தால் மயலடைந்து இழிந்து கெடுவர் என இது உரைத்துளது. இயவர்= கீழ்மக்கள். தீமையான சிற்றினத்தைச் சேர லாகாது; நன்மையான நல்லினத்தையே யா ண் டு ம் நாடிக் கூடிக்கொள்ள வேண்டும். மனமும் இனமும் நலமாய் அமையப் பெற்றவர். எவ்வழியும் இனியராய் மகிமை மிகப் பெறுவர். இது, உத்தவர்.பால் உணர வந்தது. ச ரி த ம் . இவர் யது மரபினர். வசுதேவன் தம்பியாகிய தேவ. பாகன் புதல்வர். வடமதுரையில் இருந்தவர். பெருங் திருவுடையவர். சிறந்த குணநலன்கள் நிறைந்தவர். செல்வச் செருக்கு முதலிய சிறுமைகள் யாதுமின்றி உள்ளப்பண்போடு எவ்வுயிர்க்கும் இரங்கி இதம்புரிந்து வந்தமையால் அறிஞர் யாவரும் இவர்பால் ஆர்வம் மீதுர்ந்து வந்தார். சிறந்த விவேகியாகிய விதுரர் இவர் பால் பெரு நண்பு பூண்டிருந்தார். மதிமாண்பும் மன நலமும் வாய்ந்த இவர் புலகர், வற்சர் முதலிய மாதவர் களோடு பழகி ஞான நெறிகளேத் தெளிந்து வந்தார். இவரது உள்ளத் துய்மையை உணர்ந்து கண்ணனும் வியந்தான். உறவுரிமையுடன் பல வுண்மைகளே இவரி டம் உரைத்தான். யாதவர்கள் யாண்டும் அகங்தை மண்டிக் காமக் களிப்பில் மூழ்கித் தீமைகள் புரிந்து வரு தலால் விரைந்து அழிந்துபடுவர் என்று உரைத்தான். பொறி புலன்களே அடக்கிப் பரமனைக் கருதி யடைவதே அறிவுடைமைக்குப் பயனம் என்று உணர்த்தின்ை.