பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. சிற்றி ன ஞ் சேரா ைம 2483 பும் செவ்வையா யிருத்தலால் அவரோடு சேர நேர்ந்த வர்கள் யாண்டும் இனியராய் உயர்ந்து திகழ்கின்றனர். தியவர்கள் எங்கும் தீமையே பொங்கியிருத்தலால் அவர்களோடு சேர்ந்தவர்கள் தீயராயிழிந்து ஒழிகின்ற னர். திய இனம் தீய நோயே. நல்ல இனம் இனிய அமுதம்போல் இன்பம் தரும்: திய இனம் கொடிய நஞ்சுபோல் துன்பமே விளேக்கும் ஆதலால் அத்தியினத்தினும் அல்லற்படுத்துவது வேறு யாதும் இல்லை என்று சொல்லி யருளினர். உள்ளத்தைக் கலக்கிப் பலவகையிலும் உயிரைத் துயர் உறுத்துவது அல்லல் என வந்தது. நல்ல பாலில் கொஞ்சம் நஞ்சு படியினும் அது பாழாம்: த ல் ல வ ர் இடையே தியவர் சிறிது சேர நேரினும் அவர் தியராய்த் திரிந்து இழிவர். சே இனம் நாசமே புரியும். தியவர் கூட்டுறவு தீயினும் தீயது: நஞ்சினும் கொடியது; நாசமே புரிவது; ஆதலால் அந்த நீச இனத் தை யாதும் அணுக லாகாது: காணவும் கூடாது. தீயாரைக் காண்பதுவும் தீதே; திருவற்ற தீயார்சொற் கேட்பதுவும் தீதேயாம்;-தியார் குனங்கள் உரைப்பதுவும் தீதே அவரோ டினங்கி யிருப்பதுவும் தீது. (மூதுரை 9) திய இனத்தைக் குறித்து ஒளவையார் இவ்வாறு அஞ்சி வெறுத்து அருவருத்து உரைத்திருக்கிருர். திய வர் தொடர்பு எவ்வளவு கொடியது: எத்துனே அழிவு: என்பதை இதல்ை உய்த்து உணர்ந்து கொள்கிருேம். ஆயிடை அலகைத் தேரும் அடைந்தவர் வெயர்வும்.அன்றித் துாயநீர் வறந்த அந்தச் சுடுபுலம் தோய்ந்த காலும் மீயுயர் மதிநிலாவும் வெய்யவாய்ச் சுடும்; நல்லோரும் தியவர் தம்மைச் சேர்ந்தால் தீயவர் ஆவர் அன்ருே? (திருவிளேயாடல்) கொடிய பாலே நிலத்தில் வீசுகின்ற இனியதென்றல் காற்றும் குளிர்ந்த நிலாவும் வெப்பமாயிருந்தன; நல்ல