பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2406 திருக்குறட் குமரேச வெண்பா துலங்கவரும்பிணிப்பகையும்தொழுதகையேன்தனைவருத்தா தலங்கியினி அழியுமெனக் கையமிலே ஐயமிலே. (3) எனவுரைப்பப் பிருகுஎனும் இருந்தவத்தோன் அருள்கூர்ந்து தனதுளத்துத் தியானித்துச் சார்ந்தபிணி முதல்நாடி நி ைதுவிழை வினேமன்ன! நின்மலர்ை அருள்கூட்டும் மனமுளைந்து வருந்தாது வருமிளேப்பா றுதியென்றன். (விநாயக புராணம்) அரசனுடைய பரிவுரைகளைக் கேட்டு உளம் மிக இரங்கி முனிவர் இவ்வாறு ஆற்றித் தேற்றினர். நோய் புகுந்த காரணத்தைத் தமது யோக சி த் தி யா ல் உணர்ந்து அதனை அறவே நீக்கியருளினர். பிணி நீங்கிய மன்னன் பெரு மகிழ்வடைந்து அவரைப் போற்றித் துதித்தான். பின்பு ஆ ட் சி யை மாட்சியாய் நடாத்தினன். உற்ற நோயை நீக்கிக் காக்கும் பெற்றியாரை அரசன் பேணிக் கொள்ள வேண்டும்; அங்ங்னம் கொண்டால் கொடிய துயரங்கள் யாவும் நீங்கி நெடிய மகிழ்ச்சி யடைவன் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி நின்ருன். அல்லல் அகற்றி அருள்புரியும் கல்லோரை ஒல்லையில் சேர்க வுணர்ந்து. உயர்ந்தாரை ஓர்ந்து போற்றுக. == 443. திண்டோள் உயர்தக்கன் தேர்ந்தேனுே முற்கலரைக் கொண்டான் தமராக் குமரேசா-கண்ட அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். (க.) இ-ள். குமரேசா! முற்கல முனிவரைத் தக்கன் ஏன் உற வாக உவந்து போற்றி உரிமையுடன் பேணிக் கொண் டான்? எனின், பெரியாரைப் பேணித் தமராக் கொளல் அரியவற்றுள் எல்லாம் அரிதே என்க. Fo பெறலரிய பெரும்பேறு தெரிய வந்தது.