பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. சி. ற் றி ன ஞ் சேரா ைம 2489 சிற்றினத்தைச் சேராமல் விலகி நல்ல பேரினத்தைச் சேர்ந்தவரே பேரின்ப நிலையைப் பெறுகிற பெரிய மகான்கள் ஆகின்ருர் என்பதை இதில் ஒர்ந்து உணர்ந்து கொள்கிருேம். தியவர் தொடர்பு யாதும் படியாமல் துரயவரோடு தோய்ந்து வருக. அவ் வரவே ஆருயிர்க் குப் பேரமிர்தமாய் யாண்டும் இன்பம் அருளி வரும். சார்ந்துள்ள சார்புகளின் படியேதான் உயிர்வாழ்வு தர னி எங்கும் நேர்ந்துள்ள நிலைமைகளே, நீர்மைகளின் சீர்மைகளே, நினேந்து நீதி தேர்ந்துள்ள நல்லினத்தைச் சேர்ந்துய்க! தீயஇனம் தீய நோயா ஒர்ந்ததனே அணுகாமல் விலகிைே உயிர்வாழ்வு உயர்வாம் அன்றே. தீயஇனம் தீயவிடம்; செவ்விய கல்லினம் து.ாய அமிர்தம் தொடர். தியினத்தைச் சேராதே; நல்லினம் சேர்ந்து வாழ். = இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. சிறியார் இனத்தைச் சேர லாகாது. சேர்ந்த இனத்தின்படியே மாந்தர் நேர்வர். மருவிய இனமே மனிதனேக் காட்டும். இனத்தின் வழியே அறிவு வெளியாம். இன ம் துய்மையானுல் யாவும் துய்மையாம். துரயவர் உறவு சுகமெல்லாம் அருளும். இன நலம் எல்லாப் புகழும் தரும். நல்ல இனம் யாண்டும் நன்மையாம். இருமையும் அதல்ை இன்பம் உண்டாம். நல்லவரை நயந்துகொள்; தீயவரை இகழ்ந்துவிடு. ச-சு-வது சிற்றினம் சேராமை முற்றிற்று. 312 o #