பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. சு ற் ற ம் த ழ ா ல் 2807. இருந்து எண்ணி ஆராய வேண்டும்: . ஏன் பிரிந்தான் ? எதற்காக அகன்று போன்ை ? மீண்டு ஈண்டு ஏன் வந்தான்? வந்த நோக்கம் என்ன? ' என இன்னவாறு பலவகையிலும் ஆய்ந்து அறிய வேண்டும். பிரிவிலும் வரவிலும் அறிய வுரிய மருமங்கள் பல வுள. தன் பால் பழகியிருந்த ஒருவன் பிரிங்து போல்ை அந்த உறவு அறுந்து போனதாம். மீண்டு அவன் வந்து சேர்ந்தாலும் அது மெலிந்தே நிற்கும். நீக்கம் அறுமிருவர் நீங்கிப் புனர்ந்தாலும் நோக்கின் அவர் பெருமை நொய்தாகும்-பூக்குழலாய் நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல் புல்லினும் திண்மைநிலை போம். (நன்னெறி 5) நெல்லின் உமி சிறிது பிரிந்து மருவினும் பின் பு அது முளேக்கும் திண்மை இழந்துபோம்; அதுபோல் பழகி யிருந்தவர் பிரிந்து கூடிலுைம் அவருள் உரிமை ஒழிந்து போம் என இ து உணர்த்தியுளது. இந்த உவமை நயத்தை உய்த்து உணர்ந்து பொருள் கிலேயை ஒர்ந்து தேர்ந்து தெளிந்து கொள்ள வேண்டும். பிரியாத உறவே எவ்வழியும் மரியாதையுடன் பிரியமாய் ப் பெருகி வருகிறது. - உறவினர் நண்பினர் என்பவர் மனிதனுடைய வாழ் வில் இனிய துனேகளாய் அமைந்துள்ளனர். - மனே வாழ்க்கைக்கு மனேவிபோல் புறவாழ்க்கைக்கு உறவினர் உரம் பயந்து வருகின்றனர். அந்த உறவினர் உவந்துவரத் தழுவிவரின் அ வ் வ ச பூழ் வு வளமாய் உயர்ந்துவரும். உரம் தோய்ந்த கிலம் போல் உறவு தோய்ந்த அரசு திறமாய்ச் சிறந்து திகழ்கின்றது. உறவினரிடம் உள்ளப்பாசம் இயல்பாய்த் தோய்க் துள்ளமையால் அ வ ர் அயலே ஒதுங்கியிருந்தாலும் அருகே மருவியிருக்கும் அயலாரினும் உயர்வானவரே. சிலநாள் மாறுபாடாய் வேறுபட்டு கின்ருலும் மனம் தெளிந்து விழைந்துவரின் அவரை உவந்து தழுவிக் கொள்வதே வேங் தர்க்கு நலமாம்.