பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2906 திருக்குறட் குமரேச வெண்பா கில மன்னர் பலர் இவனுக்குத் திறை செலுத்தி வந்த னர். அவருள் விடுரதன் என்னும் பேருடைய ஒருவன் இவனிடம் பேரன்புடையவன். அவனுடைய எல்லையில் வந்து மலைநாட்டுக் கள்ளர்கள் இடையிடையே அல்லல். களே விளேத்தனர். அந்தக் கொள்ளைக் கூட்டத்துக்குத் தலைவன் மிகவும் பொல்லாதவன். குசாம்பன் என்னும் பேரினன். மல்லமரிலும் வா ள மரி லும் வல்லவன். தன்னே ய | ரு ம் வெல்ல முடியாது என்ற விருேடு செருக்கி யாரையும் மதியாமல் எங்கும் படைகளோடு. சென்று இடர்கள் விளேத்து வந்தான். கண்பனும் குடி களும் வந்து இவனிடம் முறையிட்டனர். இவன் சேஆன. களோடு சென்று போராடி அவனைக் கொன்று தொலைத் தான். அந்தத் தீய கூட்டத்தாரை அடியோடு அழித்து ஒழித்தான். கொடிய கேடுகள் நீங்கின என்று நாடு எங்கணும் நெடிய மகிழ்ச்சி பொங்கி எழுந்தது. வச்சங் தன் வாழ்க என்று காட்டு மக்கள் ய | வ ரு ம் இவனே வாழ்த்தி வ ண ங் கி வெற்றி விழாக் கொண்டாடினர். களவு குது கபட வஞ்சனேகள் முதலிய திமைகள் தன் காட்டில் யாண்டும் தலே நீட்டாதபடி இவன் கிலேநாட்டி வங்தான். குடிகள் உள்ளம் உவந்து வாழ்ந்து வரவே இவன் புகழ் வெள்ளமாய் விரிந்து வந்தது. குடி புறங் காத்து ஒம்பிக் குற்றம் கடிபவனே குலவேந்தன் ஆவான் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி கின்ருன். விரிவை மார்க்கண்டேய புராணத்தில் காண்க. குடிகள் இன்பமாய் வாழ்வதே கோமுடி மன்னன் படிபு ந்தருள் பான்மையின் மேன்மையா மென்ன வடிகொள் வேலுடை, வச்சந்தன் செய்ய கோல் ஒச்சி நெடிய நீள்கடல் நெடுநிலம் நேர்நின்று காத்தான். மாந்தர் மகிழ்ந்து வளமாய் வளர்ந்துவரின் வேந்தன் விளங்கி வரும். குற்றங்களே நீக்கிக் குணங்களே ஆக்குக.