பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280.8 திருக்குறட் குமரேச வெண்பா பலநாளும் பக்கத்தார் ஆயினும் நெஞ்சில் சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார்-பலநாளும் நீத்தார் எனக்கை விடலுண்டோ தந்நெஞ்சத்து யாத்தா ரோடு யாத்த தொடர்பு. (நாலடி 214) தம் பக்கத்தே நெருங்கி யிருந்தாலும் உள்ளன் பில் லாதவர் உறவினராகார்; துரத்தே விலகி யிருந்தாலும் உள்ளத்தே பாசம் உள்ளவரை எவரும் கைவிடார் என் னும் இது ஈண்டு எண்ணி உணர வுரியது. பழமையான கிழமை சுற்றத்தாரிடம் வளமையாய்ப் பதிந்திருத்தலால் அவர் எவ்வழியும் இதமே கருதுவர். அயலார் அவ்வாறு கருதார். கேண்மை தோய்ந்துள்ள வரே கேளிர் ஆதலால் அவரை யாண்டும் நம்பலாம். மற்றவர் இனியவர்போல் தோன்றினும் உள்ளத்தே உரிமையான பாசம் இல்லாமையால் சமையம் வாய்த்த போது யாதும் உதவாமல் தழுவி விடுவர். வாள் வகுத்த படையிரும்பு வேர் சாயக் கிளேத்துழுது வளர்க்கும் சாலி; ஆள் வகுத்த கூனிரும்பு தாள் பணிதல் போலடியூ டரிந்த வாற்றல் கேள் படைத்த மனத்து யோர் பகைமைபா ராட்டுகினும் கேண் மை நீங்கார்; தாள் பிடித்து முடிவனங்கித் தனதுபா ராட்டுகினும் தடிவார் தெவ்வர். | திருக்குற்ரு ல; நாடு 15). கேளிரின் கிலேயையும், பகைவரின் புலேயையும் இது நயமா விளக்கியுளது. கலப்பை பயிர்களே வேர் சாய உழுதாலும் அவை பனேத்து வளர வேண்டும். என்னும் கருத்துடனேயே அதைச் செய்யும்; அரிவாள் பயிர்களின் காலில் விழுந்து தொழுவது போல் தழுவி னும் முழுவதும் அடியோடு அரிந்து சாய்த்துவிடும். ஏரின் கொழுவைப்போல் கிளேஞர்; கொடுவாள் போல் பகைவர்; வணக்கமாய்ப் பணிந்து பேசிலுைம் பகை வரை கம்பாதே: கடுமையாய் நடந்து கொண்டாலும்