பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 16 திருக்குறட் குமரேச வெண்பா யே இந்தப் பழமொழி இவ்வாறு உருவாகி வந்துள்ளது. அவ்வுண்மையை உரைகளால் உணர்ந்து கொள்கிருேம். கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில் கடும்புலி வாழும் காடு நன்றே. (நறுந்தொகை) கொடுங்கோல் அரசனது நாட்டில் வாழ்வதினும் கொடிய புலிகள் வாழும் காட்டில் வாழ்வது நல்லது என ஒரு மன்னன் இன்னவாறு குறித்திருக்கிருன். நீதிமுறை இல்லையானல் மக்கள் அங்கே மிக்க துயரம் அடைவர் என்பதை இதல்ை அறிந்து கொள்கிருேம். - நெஞ்சம் திரிந்து நெறி கேட னயபோது வேங்தன் நஞ்சினும் கொடியனுகிருன். ஆகவே குடிகள் எவ்வழி யும் யாண்டும் அஞ்சி அலமந்து உழல நேர்கின்றனர். கூற்றம் என்னக் கனல் என்ன க் கொதிக்கும் ஆலம் எனக்கொடியோர் சீற்றம் என்ன அறிவில்லோர் செல்வம் என்னத் திகழ் அறத்தின் ஆற்றின் நிற்றல் அது நீக்கி ஆறில் ஒன்று கொள்ளாதே ஏற்ற மான இறைகொள்ளும் இறைவன் பாவம் எனவளர்ந்தார். (இராமா உத்தர; 3) நெறிமுறை தவறிப் பொருளாசை மண்டிப் புலே. புரிகின்ற கொடிய வேந்தன் நெடிய பாவியாய் கிலே குலேந்தழிவன் என்று இது குறித்திருக்கிறது. குறிப்பு கள் கூர்ந்து ஒர்ந்து கொள்ள உரியன. * இன்று கொள ற்பால நாளைக் கொளப்பொருன்; நின்று குறையிரப்ப நேர்படான்;-சென்ருெருவன் ஆவன கூறின் எயிறலைப்பான்; ஆறலைக்கும் வேடலன் வேந்தும் அலன். (நீதிநெறி, 30) கொடுங்கோலனுடைய கொடிய இயல்புகளே இதில் உணர்ந்து உள்ளம் வருந்துகிருேம். அரச வேடம் தரித் திருந்தும் அருள் இன்றி மருள் மண்டி கிற்றலால் கொலை வேடைேடு இந்த அலைவேடன் கில ஒத்து நின்றன்.