பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29.20 திருக்குறட் குமரேச வெண்பா கொலையும் களவும் நாட்டில் புகாமல் பாதுகாக்க வுரியவன் அரசன்; அவன் கொடியய்ைப் புலே படிய கேரின் மக்கட்குப் பெரிய துயரமாம். நேர்மையும் நீதி நெறியும் நடுவு நிலைமையும் உடை யவன் என்பதற்கு அடையாளமாகவே செங்கோலே. வேங்தன் ஏங்த நேர்ந்தான். அவனது மனச் செம்மை கோல் மேல் கின்றது. எவ்வழியும் கோடாமல் எங்கும் செவ்வியய்ை ஆட்சிபுரிய வுரியவன் என்பதை அறிவிப் பதற்காகவே கோல் ஒடு கின்றன் என்று குறித்தார். நீதிக்கு உரிய கோல் அநீதியாய் மாறவே மோது கின்ற கொடிய தடியாக் கருத நின்றது. அரசுக்கு உரிய வரி ஆகிய ஆறில் ஒரு பங்கை இதமாய் வாங்குபவன் செங்கோலன். அதற்கு மேல் பேராசையால் பொருளே அ. தி க ம் விரும்புகின்றவன் வெங்கோலன். பிறர் வெருவச் செய்யும் கொடுமை யுடையவன் கடுமையான கொடுங்கோலன் ஆயினன். வேல் = கூரிய வலிய ஆயுதம். வெல்லும் திறலுடையது வேல் என வந்தது. இங்கே வேலொடு கின்ருன் என்றது .ெ க ா ள் &ள யடிக்க நேர்ந்த கள்ளன. வழிப்போக்கர்களே இடை மறுத்து வேலைக் காட்டி அச்சுறுத்திப் பொருள்களேப் பறித்துக் கொண்டு போவது திருடர் தொழில். உன்னிடம் உள்ள பொருள்களேக் கொடுத்து விடு: தடுத்தாயேல் உன் உயிரை எடுத்துவிடுவேன் என்று. கடுத்து நிற்பன். அந்த கிலே இடு என்ற தல்ை தெரிய வந்தது. ஈ தா கொடு என்னும் இரப்புரைகளுள் யாதும். கூருமல் இடு என்று அதட்டியது அவனுடைய கடுமை. கொடுமைகளேக் காட்டி கின்றது. கேட்டதைக் கொடுக்கவில்லே யால்ை ஏதேனும் . கேட்டை விளேத்து விடுவானே! என்று குடிகள் அஞ்சிக். கொடுக்க நேர்வர் ஆதலால் அரசன் இரப்புநிலை கள்ளன் பறிப்போடு ஈண்டு ஒப்பாய்க் காண வந்தது.