பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2924 திருக்கு றட் குமரேச வெண்பா வந்தான். தாழ்ந்துபோன இந்திரன் ஆழ்ந்த ஆலோச னேயுடன் காலம் கருதி கின்ருன். முடிவில் தசரத மன்ன ளிைடம் வந்து தனது இன்னலே மொழிந்து இதம் புரிய வேண்டின்ை. வேண்டவே அந்த ஆண்டகை அடலுடன் சென்று அமராடி இவனே அடியோடு வென்று தொலைத்து அரசைக் கவர்ந்து இந்திரனுக்குத் தந்து இசை பெற்று வந்தான். வென்றி வீறுடன் அவ்வீரன் புரிந்த உதவியை என்றும் மறவாமல் எவ்வழியும் வியந்து புகழ்ந்து விண் னவர்கோன் இவன் பால் நன்றி பாராட்டி நின்றன். இன்தளிர்க்கற் பகநறுந்தேன் இடைதுணிக்கும் நிழலிருக்கை இழந்து போந்து நின்தளிர்க்கும் தனிக்குடைக்கி ழதின் ஒதுங்கிக் குறையிரந்து நிற்ப நோக்கிக் குன்றளிக்கும் குலமணித் தோள் சம்பர இனக் குலத்தோடும் தொலேத்து நீகொண்டு அன்றளித்த அரசன் ருே? புரந்தரன் இன்று ஆள்கின்றது அரச! என்ருன் , (இராமா : கையடை, 8) சம்பரனே வென்று உம்பர் உலகை இந்திரனுக்குத் தசரதன் வழங்கி யுள்ளதை விசுவாமித்திர முனிவர் அவன் எதிரே இவ்வாறு வியந்து புகழ்ந் திருக்கிரு.ர். குன்று அளிக்கும் குலமணித்தோள் சம்பரன் என்று குறித்திருத்தலால் இவனது அதிசய ஆற்றலை அறிந்து கொள்கிருேம். இவ்வாறு சிறந்த கிலேயில் உயர்ந்திருக் தும் கொடுங்கோலய்ைத் திரிய நேர்ந்தமையால் குலத் தோடு அழியநேர்ந்தான். கோலொடு கின்றவன் குடிகளே வருத்த நேர்ந்தால் வேலொடு கின்ற கள்ளன்போன் எள்ளி இகழப்படுவான்; இழிந்து அழிந்து போவான் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி கின்ருன். பொருளாசை பூண்டு புரப்பான் இரப்பின் இருளாம் உலகுக் கிடர். இரவு அரசுக்கு இனிவாம். --Tom - ---