பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. .ெ கா டு ங் .ே கா ன் ைம 2935 விடும் என அ ர ச சீன அச்சுறுத்தி யிருப்பது ஈண்டு உய்த்து உணர வுரியது. மன்னுயிர் மகிழச் செய்வது மன்னவன் கடமை: அவ்வாறு செய்யாமையோடு அமையாமல் அ ழு து புலம்பும்படி செய்தால் அது கொடிய மடமையாம்: நெடிய தீமையாம்; சேக் கேடுகளாம். ஏழை அழுத கண்னிர் கூரிய வாள் ஒக்கும். என்பது பழமொழி. கண்ணிர் படை என்று சுட்டி யுள்ள தேவர் வாக்கை ஒட்டி இது வந்துள்ளது. இயல்பாகவே நல்ல ஆதரவில்லாமல் உள்ளம் வருங்தி உளேங்துள்ள ஏழைகளே வருத்துவது கொடிய பாவமாம். தோற்றத்தால் பொல்லார் துனேயில்லார் நல்கூர்ந்தார் மாற்றத்தால் செற்ருர் என வலியார் ஆட்டியக்கால் ஆற்ரு தவரழுத கண்னிைர் அவரவர்க்குக் கூற்றமாய் வீழ்ந்து விடும். (பழமொழி, 166) எளியவர் அழுது மறுகுமாறு செய்தால் அவ்வாறு செய்தவர்க்கு அக்கண்ணிர் கூற்றமாய் மூண்டு கொடிய அழிவுகளே ஆற்றிவிடும் என இது சாற்றி யுள்ளது. ஆற்ருது அழுத கண்ணிர் என்னும் இது குறளே அடியொற்றி வந்துள்ளது. முதுமொழிகளுக்கும், பழ மொழிகளுக்கும் பொய்யாமொழி மூல மொழியாயுள்ள மையை நூல்களில் சாலவும் அறிந்து வருகிருேம். தன் செல்வம் செழித்துத் தனது அரசு எவ்வழியும் தழைத்து வரவேண்டின், அரசன் எல்லார்க்கும் நல்லது செய்துவர வேண்டும்; அல்லல் செய்ய நேரின் யாவும் அழிந்துபட நேரும். அவனும் இழிந்து படுவான். அல்லலடைந்து ஆற்ருமல் அன்றழுத பாஞ்சாலி அருவிக் கண்ணிர் மல்லல்வளம் பெரிதுடைய சுயோதனன்.தன் அரசசெல்வம் யாவும் தீவாய்ப் புல்லெரிந்த தாமென்னப் புலன்தெரியாது அடியோடு புகைந்த தந்தோ!