பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1936 திருக்குறட் குமரேச வெண்பா நல்லசெயல் ஒருவிஅரசு அல்லல்செயின் நாசமெலாம் நண்னு மன்றே. துரோபதை அழுத கண்ணிரே துரியோதனன் குடி யை அடியோடு அழித்து ஒழித்தது; அந்த உண்மையை இதில் உணர்ந்து தெளிந்து கொள்கின்ருேம். செல்வமும் இன்பமும் புகழும் புண்ணியத்தால். பொலிங்து வருகின்றன. வறுமையும் துன்பமும் பழியும் பாவத்தால் தோன்றுகின்றன. உயிர்களுக்குத் துயர் இழைப்பது பொல்லாத பாவம் ஆதலால் அது செல்வத் தைத் தேய்த்துச் சீரைமாய்த்துத் திராத நோய்களேச் சேர்த்து அரசைப் பேர்த்து எறிந்து விடுகிறது. இடர்களே நீக்கிக் குடிகளுக்கு எவ்வழியும் இதமே செய்யவுரிய அரசன் கொடுமை செய்ய நேரின் அவன் கொடுங்கோலயைப் நெடும் ப ழி க ளே அடைகிருன். அவன் காட்டில் வாழுகின்ற மக்கள் அஞ்சி அலமங்து அல்லலுழந்து வருங்துகின்றனர். தீயினம் படர்ந்து வேந்தன் செறுவதே புரியு மாயின் போயினம் படர்ந்து வாழும் புகலிடம் இன்மை யாலே வேயினம் படர்ந்த சாரல் வேங்கையை வெருவிப் புல்வாய் மாயினம் படர்வ தெல்லாம் வையகம் படரு மன்றே. (சூளாமணி, மந்திர 27) வேங்தன் அல்லல் செய்ய நேரின் அந்த நாட்டில் வாழுகின்ற மாந்தர் படுகிற பாட்டை இது காட்டியுள் வசது. பொருள் கிலேகளேயும் குறிப்புகளேயும் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். -- பிறர் அல்லலுற்று அழச் செய்தவன் செல்வம். இழந்து அல்லல் உழந்து அலமந்து அழிவான். இது வசுவின் பால் அறிய வங்தது. ச ரி த ம். இவன் க லி ங் க தேசத்திலிருந்த ஒரு குறுகில மன்னன். சிங்கபுரம் என்னும் நகரிலிருந்து அரசு புரிந்த வன். அஞ்சா நெஞ்சினன். எதையும் துணிந்து செய்.