பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. .ெ காடு ங் கோன் ைம 2953 உறையே பொழிதலும். - (புறப்பொருள்) மாரிப்பேர் உறை. (புறம் 333) இவற்றுள் உறை உணர்த்தி நிற்றல் அறிக. கோன் முறை வழங்கிவரின் வான் உறை வழங்கி வரும். வையமும் கிறைய விளேங்து வரும். இயல்புளிக் கோல் ஒச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளேயுளும் தொக்கு. (குறள் , 544) அரசன் நீதிமுறை செய்துவரின் அங்கே ப ரு வ மழையும் விளைபொருள்களும் வளமாய்ப் பெருகி வரும்: அவ்வாறு செய்யாதவன் நாட்டில் மழை சரியாப் பெய் யாது: விளைவுகள் குன்றும்; .ெ வ ய் ய துயரங்களே விரிந்து எவ்வழியும் உயிர்கள் நிலைகுலைந்து நிற்கும். கொடுங்கோலால் பெருங்கேடுகள் விளையும் என்பார் மன்னவன் முறை கோடின் வானம் உறை கோடும் என்ருர். அரசு கிலே திரியின் யாவும் புலே யுறுகின்றன. கோன் நிலை திரிந்திடின், கோள் திலே திரியும்; கோள் நிலை திரிந்திடின், மாரிவறம் கூரும்; மாரிவறம் கூரின், மன்னுயிர் இல்லே ; மன்னுயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன் தன்னுயிர் என்னும் தகுதி இன் ருகும். (மணிமேகலை 7) கோள்நிலை திரிந்து நாழி குறைபட ப் பகல்கள் மிஞ்சி நீள் நில்ம் மாரி யின்றி விளைவு அஃகிப் பசியும் நீடிப் பூண்முலே மகளிர் ட்ொற்பிற் கற்பழிந்து அறங்கள் மாறி ஆனையில் வலகு கேடாம் அரசு கோல் கோடின் என்ருன். (சீவகசிந்தாமணி 255) தற்பாடு பறவை பசிப்பப் பசையற நீர் சூல் கொள்ளாது மாறிக் கால்பொரச் சிரை வெண் டலைச் சிறுபுன் கொண் மூ மழைகால் ஊன்ரு; வளவயல் விளையா; வாய்மையும் சேட்சென்று கரக்கும்; தீது தரப் பிறவும் எல்லாம் நெறிமாறு படுமே; கடுஞ்சினம் கவைஇய காட்சிக் கொடுங்கோல் வேந்தன் காக்கும் நாடே. . - - (ஆசிரியமாலே) 37O