பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. கொடுங் கோன் ைம 295s பாரில் புல் இல்லையேல் பசுவில் பால் இல்லையாம். கோவின் பரிபாலனம் குன்றில்ை ஆவின் பாலும் குன்றும்; குன்றவே நல்லவை எல்லாம் குறையும்: என்பதை இங்கே கூ ர் ங் து ஒர்ந்து கொள்கிருேம். ஆவையும் பாவையும் மற்று அற வோரையும் - தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும் காவலன் காப்பவன்; காவாது ஒழிவனேல், மேவும் மறுமைக்கு மீளா நரகமே. (திருமந்திரம் 243) பசுக்களும் பத்தினிகளும் தருமங்களும் சாதுக்களும் ஞானிகளும் ஒரு நாட்டில் நலமாய் விளங்கி வருதல் அச சனது நீதியான பாதுகாப்பி ேைலயாம். காவலன் காவாது ஒழிவனேல் அவை யாவும் அவலமாம். ஆகவே அந்தப் பாவத்தால் அவன் மீளா நரகத்தை அடைவன் எனத் திருமூலர் இவ்வாறு கூறியிருக்கிருர், - தேவர் வாய்மொழியை முழுவதும் மேவி அதிவேக மாய் அரசுக்கு இ.து அறிவுறுத்தியுள்ளது அவ்வுண் மையை துண்மையா ஒர்ந்து உணர்ந்து கொள்ளுக. அறு தொழிலோர் என்றது அந்தணரை. ஆறு கருமங்கள் அவர் க்கு உரிய தருமங்களாகப் அமைந்துள்ளன. அவை எவை? ஒதல் ஒதுவித்தல் ஈதல் ஏற்றல் வேட்டல் வேட்பித்தல் என்க.

  • = ஒதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்

ஈதல் ஏற்றல் என்று ஆறுபுரிந்து ஒழுகும் அறம்புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி. (பதிற்றுப்பத்து 24, இருமூன்று எயதிய இயல்பினின் வழாஅது. (முருகு, 1769 அறுதொழில முத்தி அருந்துறை போகிய மறைநவில் நாவின் மரபியல் அந்தனன்.


o - (பெரு - o o: - * * * * * - i o - . *** ங்கதை 2:3) ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பலபகர்ந்து. (கலி 1 }