பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. வெ. ரு வ க் த .ெ ச ய் யா ைம 2969 இளஞ்சேட் சென்னி என்னும் ஒரு சோழ மன்னன் செய்து வந்த நீதிமுறையை ஊன்பொதி பசுங்குடை யார் என்னும் சங்கப் புலவர் இங்ங்னம் வியந்து புகழ்ந்து பாடியிருக்கிரு.ர். இக்குறளின் கருத்தை இது தெளிவா விளக்கி வங் துளது. ஒறுக்கும் திறம் ஒர்ந்து உணர வுற்றது. யாரை ஒறுப்பது? தீமையாளரை. எப்படி ஒறுப்பது? தக்கபடி நாடி. எத்தகைய வகையில்? ஒத்த வகை ஒர்ந்து. ஒப்ப காடி அத்தகவு ஒறுத்தி என்னும் இது தேவர் வாய்மொழியை ஒத்து வந்துள்ளது. உண்மை கிலேகளே உய்த்து உணர்ந்து கொள்ளுக. மானச தத்துவங்கள் இங்கே நன்கு மருவி யிருக்கின்றன. தக்காங்கு நாடாமலும், ஒத்தாங்கு ஒறுக்காமலும் தன் மனம் போனபடியே மதத்துச் செய்யின் அது வெருவங்த செய்கை யாம்; ஆகவே மக்கள் அ அச் ச ம் அடைந்து அயர்வர்: அரசுக்கும் உச்சமான பழியாம். உயிர்கள் அல்வழியில் செல்லாமல் அடங்கி நல் வழியில் ஒழுகி வருமாறே அரசன் ஒறுப்பு உருப்பட வேண்டும். அவ் வகையில் வருவதே செவ்வியதாம். தண்ணளி புரிய வுரியவன் தண்டம் புரிய நேரின் இன்னவாறு புரிக என இது நயமா உணர்த்தி யுளது. விடமும் துாயதெள் அமுதமும் மின்ன ர்ை விழிகளின் இடைத்தோன்றும்; கடவு தண்டமும் கருணையும் மனுநெறிக் காவலர் இடைத் தோன்றும்; சுடரில் காய்வதும் குளிர் துளி பொழிவதும் சூரியர் இடைத்தோன்றும்; அடைவு சேர்பெருந் தவத்தர்பால் சாபமும் அதுக்கிர கமும் தோன்றும். (திருக்குற்ருலப் புராணம்) 372