பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

297.2 திருக்குறட் குமரேச வெண்பா மாந்தர் வெருவி மறுகாமல் மாறடக்கும் வேக்தன்சீர் ஓங்கும் விரிந்து. தீயரையும் நேயமா அடக்குக. கடுமையுள் இனிமை. 56.2. திண்டோள் வழுதி சினந்தெழுந்தும் ஏனிரக்கம் கொண்டே புரிந்தான் குமரேசா-மண்டிக் கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர். (உ) இ-ள். குமரேசா வழுதி மன்னன் வெகுண்டு எழுந்தும் ஏன் இனியய்ை இரங்கி யருளினன்? எனின், ஆக்கம் நெடிது நீங்காமை வேண்டுபவர் கடிது ஒச்சி மெல்ல. எறிக என் க. சாதுரிய தண்டனே தெரிய வந்தது. தம் செல்வம் நெடுங்காலம் கிலேத்திருக்க விரும்பு கின்றவர் கடுமையா ஓங்கி இதமா வீசுக. குற்றம் செய்தவரை அரசன் தண்டிக்க நேர்க்த போது செய்ய உரிய திறனே இது நயமா விளக்கியுளது. தக்காங்கு நாடி ஒத்தாங்கு ஒறுக்க என முன்னம் குறித்தார்; ஒறுக்குங்கால் உஞற்ற வுரிய ஒரு முறையை இதில் உணர்த்துகிரு.ர். - காரிய சாதனைகள் சிரிய பண்பாடுகளோடு சிறந்து வர வரைந்து காட்டியிருக்கிருர். இக்காட்சி இறைமாட்சி யின் இனமாய் எண்ண வந்துள்ளது. கோதான தீது: களே நீக்கிக் குடிகளைப் பாதுகாப்பது அரச தருமம் ஆத லால் குற்றம் கடிதல் இங்கே குணமுடன் அறிய வங்தது. கடிது கெடிது என் பன கடுமை கெடுமை என்னும் பண்படிகளாய்ப் பிறந்துள்ள குறிப்புரைகள். ஒச்சி=ஒங்கி: உயரத் துரக்கி. - முழவுத்தோள் ஒச்சி. (புறம், 50)